என் முகத்தில் இந்த பிரச்சனை இருந்தது. முதன் முறையாக கூறிய நிவேதா தாமஸ்.

0
2238
Nivetha-thamos
- Advertisement -

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதா தாமஸ், 2008-ஆம் ஆண்டு வெளி வந்த ‘குருவி’ என்ற தமிழ் திரைப்படதில் நடித்தார். இது தான் நிவேதா தாமஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் தரணி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்
நடித்திருந்தார்.

-விளம்பரம்-
nivetha-thomas

இதனைத் தொடர்ந்து எம். சசிக்குமாரின் ‘போராளி’ என்ற தமிழ் படத்தில் நடிகர் அல்லரி நரேஷிற்கு ஜோடியாக நடித்தார் நிவேதா தாமஸ். ‘போராளி’ படத்துக்கு பிறகு ஜெய்யின் ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘தளபதி’ விஜய்யின் ‘ஜில்லா’, ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘பாபநாசம்’ போன்ற சில படங்களில் நடித்தார் நடிகை நிவேதா தாமஸ். இதில் ‘பாபநாசம்’ படத்தில் நடிகை நிவேதா தாமஸின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

- Advertisement -

அதன் பிறகு மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை நிவேதா தாமஸ், அடுத்ததாக தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். 2016-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த திரைப்படம் ‘ஜென்டில் மேன்’. இது தான் நடிகை நிவேதா தாமஸ் தெலுங்கு சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இதில் ஹீரோவாக ‘நேச்சுரல்’ ஸ்டார்’ நானி நடித்திருந்தார்.

Nivetha-Thomas

இந்த படத்தினை இயக்குநர் மோகன் கிருஷ்ணா இந்திரா காந்தி இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘நின்னு கோரி, ஜெய் லவ குசா, ஜூலியட் லவ்வர் ஆஃப் இடியட், 118, ப்ரோசேவரேவருரா’ என அடுத்தடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்தார். கடைசியாக நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில் வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘தர்பார்’. இந்த படம் நடிகை நிவேதா தாமஸிற்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். நடிகை நிவேதா தாமஸிற்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில், நடிகை நிவேதா தாமஸ் அளித்த பேட்டி ஒன்றில் “நான் நிறத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ஆனால், மக்கள் நிறத்தை வைத்து ஜட்ஜ் செய்வதை பார்க்கும்போது, எதிர்கால குழந்தைகளை நினைக்கும்போது பயமாக இருக்கிறது. மேலும், மக்கள் நிறத்தை வைத்து எவ்வாறு அடுத்தவர்களை நடத்துகிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன். வருங்காலத்தில் எனது குழந்தைகளிடம் வெளிப்புற அழகு என்பது முக்கியம் அல்ல. மனதளவில் யார் எப்படி இருக்கிறார்கள் என்பதே முக்கியம் என்பதை சொல்லிக் கொடுத்து வளர்ப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement