தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் நிவின் பாலி பேசி இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.
பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
நடிகர் நவீன் பாலி:
இந்நிலையில், நடிகர் நிவின் பாலி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகச் சொல்லி பாலியல் தொந்தரவு செய்ததாகவும். மேலும் அவருடன் சேர்ந்து சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நேர்யமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் கொச்சி ரூரல் எஸ்.பி அலுவலகத்தில் முதலில் புகார் அளித்திருந்தார். பின்பு அந்தப் புகார் ஊனுக்கள் காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அந்தப் புகாரில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு வேலைக்காக அந்தப் பெண் துபாய் சென்று இருந்தாராம்.
— Nivin Pauly (@NivinOfficial) September 3, 2024
பெண் கொடுத்த புகார்:
அப்போது, ஸ்ரீயா என்ற பெண் தனக்கு ஒரு நடிகர் நிவின் பாலியை அறிமுகம் செய்து வைத்ததாகவும், அதன் பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகச் சொல்லி நிவின் பாலி மற்றும் சிலர் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த இளம் பெண் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நடிகர்கள் மீதான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை குழு அந்த இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் நிவின் பாலி, ஸ்ரீயா உட்பட ஆறு பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
நிவின் பாலி அறிக்கை:
அதனைத் தொடர்ந்து நிவின் பாலி தனது எக்ஸ் தளத்தில், எனக்கு எதிராக கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு என் கவனத்திற்கு வந்ததை அடுத்தே இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். இது உண்மைக்கு புறம்பானதும், மோசமான உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இதன் பின்னால் செயல்படுபவர்களை சட்டத்துக்கு முன் கொண்டு வர எந்த எல்லைக்கும் நான் செல்வேன். என்னை புரிந்து கொண்டு, தொடர்பு கொண்டவர்களுக்கு எனது நன்றி. இந்த வழக்கை நான் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
செய்தியாளர் சந்திப்பு:
அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு எதிராக முதன்முதலாக இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்துள்ளது. அந்தப் பெண் யார் என்று எனக்கு தெரியாது. இந்த குற்றச்சாட்டு என்னையும், என் குடும்பத்தையும் பல வகையில் பாதித்துள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது உறுதி. இதை சட்டத்தின் வழியில் எதிர்கொள்வேன். ஏற்கனவே ஒரு முறை இதுபோன்று புகார் உள்ளதாக காவல்துறை அதிகாரி அழைத்திருந்தார். அந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நினைத்து நான் அப்போது அந்தப் பெண் மீதும் புகார் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.