எந்த காட்சியையும் நீக்க முடியாது – தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு

0
3719
Hema Rukmani

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்‘. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார் . இந்த வசனங்களை நீக்கியாக வேண்டும் என பாஜக தலைவர்கள் சாடி வந்தனர். இப்படத்தின் தயாரிப்பாளர் ஹெமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் பற்றிய சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார்
அவர் கூறியதாவது
Hema Rukmaniமெர்சல் படத்திலிருந்து எந்த காட்சிகளும் நீக்கபடவில்லை என படத்தில் வரும் “பூமனத்து பிச்சையம்மாள் துனை” வசனத்துடன் நக்கலாக தனது துனிச்சலை வெளியிட்டுள்ளார் . படம் 100 கோடியை தண்டியுள்ளது. மேலும் ஒரு தடையை தகர்த்துள்ளது