பொதுவாக நடிகர்களை பொது இடத்தில் ரசிகர்கள் கண்டால் அவர்களிடம் சென்று செல்பி புகைப்படத்தை எடுத்துக் கொள்வது வழக்கம். அதேபோல நடிகர்கள் சிலர் இதுபோன்ற செல்பி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். ஆனால், சமீபத்தில் செல்பி எடுக்க வந்த பெண் ரசிகர்களிடம் பயங்கரமாக பல்பு வாங்கி உள்ளார் பாகுபலி படம் நடிகை நேரா ஃபதேஹி.
ராஜமௌலியின் பிரமாண்ட இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் நடிகை நேரா ஃபதேஹி. மேலும், தமிழில் கார்த்திக், நாகார்ஜுனா நடிப்பில் வெளியான தோழா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். கனடா நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது மும்பையில் தங்கியபடி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர், தனது நண்பருடன் மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது நேராவை நோக்கி இளம் பெண் ஒருவர் செல்ஃபி எடுக்க ஓடி வந்தார். அந்த நபர் தன்னிடம் தான் செல்ஃபி எடுக்கப் போகிறார் என்று எண்ணினார் நேரா. ஆனால், அந்த ரசிகையோ நேரா அருகில் நபருடன் செல்பி எடுத்தார். இதனால் நேராவிற்கு கொஞ்சம் நோஸ் கட் ஆகிவிட்டது