குடித்துவிட்டு விபத்து – கால் மேல் கால் போட்டு காலா போல போலீசுக்கே சவால் விட்ட வட நாட்டு போதை பெண்.

0
1413
- Advertisement -

குடித்துவிட்டு காரை ஒட்டி வாகனத்தின் மீது மோதியதுடன் விசாரிக்க வந்த போலிஸாரிடமும் வாக்குவாதம் செய்த வட இந்திய பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதே ஆன இளம் பெண் நித்து. வடமாநிலத்தை செந்தித்த இவர் திருவள்ளூர் அருகில் உள்ள மேல்நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சக நண்பர்களுடன் பயிற்சிக்காக வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக சென்னையிலேயே தன் நண்பர்களுடன் அங்குள்ள பகுதியிலேயே தங்கி பயிற்சியை மேற்கொண்டுள்ளார். பயிற்சி நிறைவை முன்னிட்டு சக நண்பர்களுடன் மணவாளநகர் பகுதியில் உள்ள ஓரு நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

-விளம்பரம்-

அங்கு நடைபெற்றுள்ள விருந்தில் நித்து அளவுக்கதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர், தனது ஜீப்பை அவரே ஓட்டி வந்துள்ளார். ஜீப் கிளம்பிய சிறிது தூரத்திலேயே முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது நித்து ஓட்டி வந்த ஜீப் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் வேன் மற்றும் நித்துவின் ஜீப் முன்புறமும் சேதமடைந்துள்ளது. வாகனத்தை ஓட்டி வந்த நித்து குடி போதையில் இருந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றநர். ஆனால், மது போதையில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் நீங்கள் யார் என்னிடத்தில் விசாரணை செய்ய? என்று நித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், தன் ஜீப்பில் சென்று அமர்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டும் போலீசாரை ஒருமையில் பேசினார்.. பின்னர், அங்கிருந்து மீண்டும் போலீஸாரிடத்தில் வந்து , தன்னை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு பிடிவாதம் பிடித்தார்.

அதே போல நான் தான் விபத்தை ஏற்படுத்தினேன். அதற்கு நான் 10,000 ரூபாய் பணமும் கொடுத்துவிட்டேன். இப்போ என்ன அதை பிரச்சனையாக ஆக்க வேண்டுமா, நான் தமிழ் நாட்டுக்கு வந்து தப்பு பண்ணிட்டேன். இனிமேல் நான் தமிழ் நாட்டுக்கு வரவே மாட்டேன் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து அந்த பெண் ரகளையில் ஈடுபட்டதான் அந்த பெண்ணின் நண்பர்களிடம் செல்போனில் தகவலை கூறிய போலீஸார், அவர்களிடத்தில் பெண்ணை ஒப்படைத்தனர். தன் நண்பர்களிடத்திலும் வாக்குவாதத்தில் நித்து ஈடுபட்டார். பின்னர், பெரும் பாடு பட்டு நித்துவை அவரின் நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். நித்து ஓட்டிய ஜீப்பை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில் , பெண் என்பதால் தகராறில் ஈடுபட்ட அவரை கைது செய்யவில்லை. பெற்றோருடன் காவல் நிலையத்துக்கு வர கூறியிருக்கிறோம். பின்னரே வழக்குப் பதிவு செய்யப்படும் என்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement