அன்புள்ள ரஜினிகாந்த் இல்லை – மீனா, ரஜினியுடன் நடித்த முதல் படம் இது தான்.

0
1097
meena

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மீனா. இவர் தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். அதன் பிறகு இவர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

Radha Sees Meena With Ambika || Enkeyo Ketta Kural Movie || Emotional Scene  - YouTube

இந்நிலையில் நடிகை மீனா அவர்கள் ரஜினிகாந்துடன் முதன் முதலில் நடித்த படத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மீனா- ரஜினிகாந்த் இருவரும் சேர்ந்து 1984 ஆம் ஆண்டு வெளிவந்த அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் தான் நடித்து உள்ளார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்கு முன்பே மீனா ரஜினிகாந்த் உடன் நடித்து உள்ளார்.

- Advertisement -

1982 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த எங்கேயோ கேட்ட குரல் படத்தில் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த், அம்பிகாவுக்கு மகளாக மீனா நடித்திருப்பார். இந்த படம் பாக்ஸ் ஆபீசில் இடம்பெற்றிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த படத்தின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Enkeyo Ketta Kural first film to feature Rajinikanth and Meena

மேலும், மீனா அவர்கள் ரஜினிகாந்துடன் வீரா, எஜமான், முத்து போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மீனா நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, நயன்தாரா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement