கொரோனாவை தொடர்ந்து சீனாவில் ஹண்டா என்ற புதிய வைரஸ். ஒருவர் பலி. என்ன வைரஸ் தெரியுமா ?

0
4768
hanta-virus
- Advertisement -

நாடு முழுவதும் தற்போது பெரும் ஆபத்தான நிலையை உருவாகியுள்ளது இந்த கொரோனா வைரஸ். இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றுவரை 446 ஆக உயர்ந்து இருக்கிறது. இதில் 36 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் ,9 பேர் இந்த கொடிய நோயினால் இந்தியாவில் பலியாகி இருக்கிறார்கள். மேலும், மகாராஷ்டிரா மற்றும் கேரளா பகுதிகளில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100 எட்ட இருக்கிறது அதேபோல டெல்லி உத்தர பிரதேசம் குஜராத் பஞ்சாப் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Hantavirus

- Advertisement -

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. மேலும், சீனர்களின் உணவு பழக்கத்தாலும், அஜாகரியத்தாலும் இந்த வைரஸ் பரவியது என்று பல்வேறு நாடுகளும் குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது சீனாவில் அடுத்த வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பாருங்க : கொரோனா அச்சத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட குடும்பம். பின்னர் நேர்ந்த பரிதாபம்.

-விளம்பரம்-

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. மேலும், சீனர்களின் உணவு பழக்கத்தாலும், அஜாகரியத்தாலும் இந்த வைரஸ் பரவியது என்று பல்வேறு நாடுகளும் குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது சீனாவில் அடுத்த வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வைரஸின் பெயர் ஹண்டா வைரஸாம். ஹண்டா வைரஸ்கள், எலி (Rodent) வகையைச் சேர்ந்த பிராணிகளின் மூலம் பரவுவதாக CDC எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் உனான் மாகாணத்தில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர் பேருந்திலேயே உயிரிழந்துள்ளார். அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஹண்டா வைரஸால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். 

Image

இந்த ஹண்டா வைரஸ் எலி, அனில் மற்றும் அந்த குடும்ப வகையினை சார்ந்த விலங்குகளின் கழிவு, சிறுநீர், எச்சில் ஆகியவற்றின் மூலம் நோய் தொற்று ஏற்படும் என தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் காற்றின் மூலமோ, மனிதர்களின் மூலமாகவோ பரவாது.  மேலும் ஹண்டா வைரஸ் பாதிப்புள்ளவர்கள், மற்றவர்களை கடித்தால் அதன் மூலமும் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது, மிகுந்த உடல் சோர்வு, காய்ச்சல், தசை வலி, தலை வலி, தலை சுற்றுதல், குளிர் மற்றும் வயிறு சார்ந்த பிரச்னைகள் ஹண்டா வைரஸின் அறிகுறிகளாகும். 

மேலும் இந்த வைரஸ் பாதிப்பால் 38% உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் போன்றே ஹன்டவைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட சிகிச்சையே அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டால், அவர்களை காப்பாற்றலாம் என்று US Centers for Disease Control and Prevention தெரிவித்துள்ளது.

Advertisement