உன் படத்தில் வரும் பாடல் வரியை போல வா தம்பி – விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் சீமான் கருத்து.

0
7997
- Advertisement -

சமீபத்தில் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்தவில்லை நடிகர் விஜய்யை பலரும் கேலி செய்து வருகின்றனர். ஆனால், நடிகர் விஜய் தன்னுடைய காருக்கு வரி செலுத்திவிட்டார் என்றும் அவர் மற்றவர்களை போலவே நுழைவு வரி விலக்கு கேட்டு தான் வழக்கு தொடர்ந்தார் என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் விஜய்க்கு ஆதரவாக பல்வேரு நடிகர்களும் அரசியல் பிரபலங்களும் ஆதரவாக பேசி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

அன்பு தம்பி விஜய், அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது. துணிந்து நில். இது அவதூறுதானே ஒழிய குற்றம் இல்லை. தொடர்ந்து செல். ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு. பொதுவாக அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றம் செல்லமாட்டார்கள். உண்மையை உணராமல் வழக்கு தொடர்ந்த காரணத்திற்காக குற்றவாளி போல சித்தரிப்பதா?

இதையும் பாருங்க : அந்த படத்தால் ரஜினி படத்தின் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் – தற்போது புலம்பும் கிரண்

- Advertisement -

விஜய் மீது அவதூறுகளை அள்ளிவீசுவது எவ்வகையிலும் நியாயம் இல்லை. ஒரு பொருளை வாங்கும் விற்பனை விலைக்கு இணையாக அரசுக்கு செலுத்த வரி விதிப்பது தவறு’ என்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்து ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு’ என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி என்று கூறியுள்ளார் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தான் நடிகர் விஜயை நடிகர் சீமான் கடுமையாக தாக்கி பேசியதோடு சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் கூறியிருந்தார். 

சீமானுக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

அதே போல கடந்த ஆண்டு சட்ட மன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சீமான், ரஜினிகாந்த், கமல்ஹாசனை அடிக்கிற அடியில் வேறு எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது என்றார். இது விஜய்க்கும் பொருந்துமா என்ற நிருபரின் கேள்விக்கு, எல்லோருக்கும் பொருந்தும். நானும் திரையுலகத்தில் இருந்து வந்துள்ளேன். ஆனால் நான் ரசிகர்களை சந்தித்து அரசியலுக்கு வரவில்லை. சாவுகூட்டத்தில் வெடித்துக் கிளம்பி மக்களை சந்தித்து நான் அரசியலுக்கு வந்துள்ளேன் என்று கூறி இருந்தார் சீமான்.

-விளம்பரம்-
Advertisement