முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வதிற்கு மீண்டும் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக கட்சியானது இரண்டாக பிரிந்து இரட்டை தலைமையில் இருந்து வந்தது. அதன் பின் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களால் ஒ. பன்னீர் செல்வதை கட்சியில் இருந்து நீக்கினர். அவரும் நீதி மன்றகளை நாடி சட்ட போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.
இருப்பினும் அவரை கட்சியை விட்டு நீக்கியது செல்லும் என்றே தீர்ப்பு வர அவருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் டி.டி.வி. தினகரனுடன் தற்போது இணைத்து வருகிறார். அவருக்கு மீண்டும் மீண்டும் சிக்கல் போல அவரது மகன் எம்.பி ரவீந்தரநாத் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார். மேலும் ஒரு சிக்கல் போல அவரது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை சேர்த்த வழக்கில் முடிவடைந்த நிலையில் அந்த வழக்கை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மீண்டும் எடுத்துள்ளார். அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வருகிறது.
ஒபிஎஸ் வழக்கு:
முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் மீது இருந்த வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன் வழக்கு இன்று வரவுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் 2001முதல் 2006 வருடத்தில் முதலமைச்சராகவும் அமைச்சராகவும் இருந்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீது அவரது மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதப் மற்றும் மகள் கவிதா பானு மற்றும் அவரது சகோதரர்கள் பேர் உட்பட ஏழு பேர் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
சிவகங்கை மாவட்டம் நீதிமன்றதில் 2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் போதுமான ஆவணங்கள் இல்லையென்றும் மேற்கொண்டு இந்த வழக்ககை நடத்தவில்லை எனவும் புகரை திரும்ப பெறுவதாகவும் அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் படி ஒ/பன்னீர் செல்வம் உள்ளிட்டோர்க்கு எதிரான இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவிப்பதாக 2012ஆம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீடு செய்யாத நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை தமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.
வழக்கு விபரம்:
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது 2001 முதல் 2006ம் ஆண்டு வரை வருவாய் துறை அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியை 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. பின்னர் அதிமுக ஆட்சி காலத்தில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதனை ஏற்ற நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கை முடித்து வைத்தது இந்த அளவில் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார் என்று அந்த வழக்கு முதல் வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது