பாலத்திற்கு அடியில் பிணமாக கிடந்த நடிகை.! கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.!

0
490

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒடிஷாவில் பிரபல நடிகை சிம்ரன் சிங் மகாநதி என்பவர் ஆற்றுப்பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது ஒடிசா திரையுலகை பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.

ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் சிம்ரன் சிங். ரசிகர்கள் அவரை செல்ஃபி பெபோ என்று அழைப்பார்கள். சம்பல்புரி மொழி ஆல்பங்கள் மூலம் பிரபலமானவர் சிம்ரன். செல்ஃபி பெபோ, ரிக்ஷாவாலா, ரிம்ஜிம், மோர் கேர்ள்பிரெண்ட்- 2, தில் கா ராஸா, டிஜே பாபு ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட ஆல்பங்களில் அவர் தோன்றியுள்ளார்.

இந்நிலையில் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள கொய்ரா மாதா அருகே இருக்கும் மகாநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்ரன் பிணமாகக் கிடந்தை போலீசார்கண்டுபிடித்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிம்ரனின் தலை மற்றும் முகம் முழுக்க காயங்களாக இருந்தது. அவரின் உடலுக்கு அருகே ஒரு பை கிடந்தது.

இந்நிலையில் நடிகை சிம்ரன் உயிரிழப்பதற்கு முன்பாக வாட்ஸ் அப்பில் அனுப்பிய வாய்ஸ் மெஸேஜ் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அனைவரும் டிராமா போடுகிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் நான் முளுமையாக வெறுத்துவிட்டேன். நீ என்னை உன்னுடன் அழைத்து சென்றிருக்க வேண்டும். என்னுடைய குடும்பத்தை விட்டு நான் வெகு தூரம் செல்கிறேன் என்று அந்த வாய்ஸ் மெஸேஜில் கூறியுள்ளார்.