ராஜா ராணி சீரியலை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்.! ஏன் தெரியுமா.! உள்ள பாருங்க புரியும்

0
1728
raja-rani-serial

தமிழ் சினிமாவில் காட்சிகளில் தான் தனது கணவருக்கு எதாவது பிரச்சனையோ, அல்லது உடல்நல குறைபாடோ ஏற்பட்டால் அவர்களுக்காக வேண்டி அவரது மனைவி மண் சோறு சாப்பிடுவது , தீ செட்டி தூக்குவது போன்ற பல காட்சிகள் படமாக்கபட்டிருந்தன. தற்போது சினிமாவிலே இது போன்ற காட்சிகளை எடுப்பதை நிறுத்தி விட்டார்கள்.

raja rani

ஆனால் இந்த கலாச்சாரத்தை மீண்டும் கொண்டுவந்துள்ளது விஜய் டிவி. தற்போது அந்த டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “ராஜா ராணி” என்ற சீரியல் இல்லத்தரசிகளை கவர்ந்த தோடு இளவட்டங்களையும் கவர்ந்ததற்கு காரணம் அதில் செம்பா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் மானஸா என்ற ஒருவரால் தான்.

இந்த தொடரில் அவருக்கு கணவராக நடிகர் சஞ்சீவ் நடித்துள்ளார். சமீபத்தில் ஒளிபரப்பான இந்த சீரியலின் காட்சி ஒன்றில் சஞ்சீவிற்கு காச்சல் ஏற்பட்டு விடுகிறது இதற்காக அவரது மனைவியாக நடித்துள்ள மானசா கோவில் கோவிலாக ஏறி தனது கணவர் குணமடைய பிராத்தனை செய்து வருகிறார் .

அதுவும் எப்படி கையில் ஒரு சட்டியை வைத்துக் கொண்டு முட்டி போட்டவாரே கோவிலில் பிராத்தனை செய்துவருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சாதாரண காச்சலுக்கே இந்த அளவு பிராத்தனையா, ஒரு காச்சல் மாத்திரை போட்டால் சரியாகி போய்விடுகிறது, இதற்கு எதற்கு இந்த கூத்து என்று கலாய்த்து வருகின்றனர்