விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றாக திகழ்ந்து வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் இரண்டு விடியோக்கள் கூட வெளியாகி இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற பல்வேறு பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்குபெறப் போகும் போட்டியாளர்களை பற்றிய விவரம் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பிரபல ஜாங்கிரி மதுமிதா கலந்துகொள்ள போவதாக நம்பகரமான செய்திகள் வெளியாகியுள்ளது. ஓகே ஓகே படத்தின் சந்தானத்திற்கு ஜோடியான நடித்தவர் ஜாங்கிரி மதுமிதா.
அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் திருமணமான இவர், எப்படி கணவரை பிரிந்து 100 நாட்கள் இருப்பார் என்று மதுமிதாவின் நெருங்கிய வட்டாரத்தில் கேட்கப்பட்ட போது மதுமிதாவுக்கு சவால் என்றால் மிகவும் பிடிக்கும் அதுமட்டுமில்லாது பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்று நம்புகிறார் என்று கூறியுள்ளனர்.