‘சூப்பர் ஸ்டாராக தான் சாவேன்’ – சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அப்போதே ஆசைப்பட்டுள்ள அஜித். இதோ அந்த பேட்டி.

0
2266
- Advertisement -

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து அஜித் அளித்து இருக்கும் பழைய பேட்டியின் ஆதாரங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து தான். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் புது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல்ஹக்கும் பாடலில் இடம்பெற்ற பட்டத்த பறிக்க 100 பேரு என்ற வரிகள் விஜய்க்கு பதிலடி என்று ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இதற்கெல்லாம் மேல் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன பறந்து, காக்கா கதை விஜயை சீண்டுவது போலவே இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் ரஜினி மீது கடும் கோபத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், ரஜினியே சொன்னாலும் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சமூக வலைதளத்தில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

தற்போது ரஜினி – விஜய் ரசிகர்கள் இருவருக்கும் மத்தியில் யார் சூப்பர் ஸ்டார் என்ற பனிப் போர் சென்று கொண்டு இருக்கும் வேலையில் அஜித் ரசிகர்கள் சிலரும் ரஜினிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். மேலும், அஜித் என்றைக்கும் இதுபோன்று சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப் பட்டது இல்லை என்று கூறி வருகின்றனர். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் அஜித் அளித்த பழைய பேட்டிகளை எல்லாம் தோண்டி எடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அஜித் நடித்த ஜீ படத்தின் போது அஜித்திடம் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அப்போது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி இருக்கும் அஜித் ‘ சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவது என்ன தவறு இருக்கிறது ? நான் ரஜினிக்கு போட்டி என்று பலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். அது தவறு. இருப்பினும் ‘யாருக்கு அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறதோ அவர் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார்கள் என்று ரஜினி சாரே கூறி இருக்கிறார்.

எனவே, யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படலாம் இல்லையா ? அதனால் எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. அஞ்சினையா படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நானும் விண்ணப்பம் போட்டுள்ளேன். அனால், நான் எதோ ரஜினி சாருக்கு போட்டி என்று சொன்னது போல வதந்திகளை கிளப்பி வருகின்றனர். நான் சூப்பர் ஸ்டார் ஆவேன் என்று சொன்னதை நிரூபிப்பேன். நான் சூப்பர் ஸ்டாராக தான் இறப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisement