மீண்டும் சிவா-அஜித் கூட்டணியில் படம்.! உறுதி செய்த தயாரிப்பாளர்.!

0
1738
shiva
- Advertisement -

வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களை தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக கைகோர்த்துள்ளார் அஜித். இவர்கள் கூட்டணியில் நேற்று வெளியாகின விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

-விளம்பரம்-

குடும்ப ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சத்ய ஜோதி நிறுவனத்தின் தியாகராஜன் பேசுகையில்.

- Advertisement -

விஸ்வாசம் படத்திற்கு நல்ல பாசிடிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படமும் இதயம், கிழக்கு வாசல் படங்கள் மாதிரி மக்களிடையே அதிகம் பேசப்படும். இப்படத்தின் முதல் காப்பியைப் பார்த்த போதே எனக்கு அந்த நம்பிக்கை வந்துவிட்டது.

இந்த படத்திற்கு பிறகு தனுஷை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க உள்ளோம். அதற்கு அடுத்தபடியாக நிச்சயம் சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கும் புதிய படத்தை நாங்கள் தயாரிப்போம். இந்த வெற்றிக் கூட்டணி நிச்சயம் மீண்டும் இணையும் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.

-விளம்பரம்-

Advertisement