ஓணம் புடவையில் மலையாள பாடலுக்கு ஆட்டம் போட்டு முழு மல்லு சேச்சியாக மாறிய ஷிவானி.

0
2162
shivani
- Advertisement -

கொரோனா பிரச்சனையில் மக்கள் கொஞ்சம் அவதிப்பட்டு வந்தாலும் தங்களின் துயர் தீர்க்க தங்களை காண வரும் மகாபலிக்கு ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை நாளில் அளிக்கும் வரவேற்பை இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு வீட்டில் கோலம் போட்டு விளக்கேற்றி விருந்து படைத்து வரவேற்பு கொடுத்து வருகின்றனர் மலையாள மக்கள். மலையாள மக்களை தவிர மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூட ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம் தான்.

-விளம்பரம்-
View this post on Instagram

Blossom ??

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

ஓணம் பண்டிகை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது ஓணம் புடவை தான். ஓணம் பண்டிகை வந்தாலே பல்வேறு பெண்களும் ஓணம் புடவையை கட்டிக்கொண்டு புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதிலும் நடிகைகளை பற்றி சொல்லவா வேண்டும். இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல பிரபலங்களும் சமூக வலைதளத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மேலும், ஓணம் புடவையை கட்டிக்கொண்டு அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகையான ஷிவானியும் தனது பங்கிற்கு ஓணம் வாழ்த்தை தெரிவித்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.இந்த தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி. பகல் நிலவு சீரியலுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார்.

கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.19 வயதான இவர் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் புடவையில் மலையாள பாடலுக்கு ஆட்டம் போட்டு மலையாள சேச்சியாக மாறியிருக்கிறார் ஷிவானி.

-விளம்பரம்-
Advertisement