இப்படி பண்ணி தான் இந்த இடத்துக்கு வந்து இருப்பார் – மேயர் குறித்து கொச்சையாக பதிவிட்டு சிக்கலில் சிக்கிய ட்விட்டர் வாசி.

0
465
mayor
- Advertisement -

மக்கள் மத்தியில் முதன்மையான ஷோசியல் மீடியாவான ட்விட்டர் பக்கத்தில் சென்னை மேயர் பிரியாவை ட்விட்டர் பயனாளி ஒருவர் மிகவும் அநாகரீகமாக பேசியிருப்பது தற்போது அணைத்து ஷோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது. ஷோசியல் மீடியா என்பது அணைத்து தர மக்களும் தங்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகள் இரண்டையும் கூறும் ஒரு பொது இடம். இங்கு அரசியல் , சினிமா, விளையாட்டு, சமூகம், மருத்துவம், நண்பர்கள் என பல நல்ல விஷியங்களை பகிர்ந்து கொண்டாலும், இந்த இடத்தை மற்றவர்களை விமர்ச்சிப்பதற்க்கும் , பல தீயா விஷியங்களுக்கும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

இணையத்தில் பல நல்ல விஷயங்களும், பல தீய விஷியங்களும் நடக்கும் இடம் என்பதினால் பல நிபந்தனைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும். அந்த நிபந்தனைகளை பயனாளிகள் மீறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னை மாநகர மேயர் பிரியா மீது ஆபாசமாக கருத்து தெரிவித்த ட்விட்டர் பதிவினால் அந்த பயனாளி சிக்கலில் மாட்டியுள்ளார்.

- Advertisement -

திமுக எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி :

சென்னையில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக கட்சியின் முதல் தலித் பெண் மேயரான பிரியாவை சென்னை நகரம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெற்றது. இவர் முன்னாள் திமுக எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தியும் `திரு.நகரில் உள்ள நகரில் உள்ள வார்டு அளவிலான திமுக செயல்தலைவரான “பெரம்பூர்” ஆர்.ராஜனின் மகளும் அவர். இவர் தன்னுடைய படிப்பை பெண்களுக்கான ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரியில் எம்.காம் முடித்தவர்.

ஆபாச கமன்ட் :

பிரியா மேயர் ஆனவுடன் இவரை பல பிரபலங்கள் பாராட்டியிருந்தனர். இந்நிலையில் வரும் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு நிர்வாகிகள் கூடும் கூட்டத்தினை அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பு பல செய்தி சேனல்களில் தலைப்பு செய்தியாக வந்திருந்தது அதே நேரத்தில் ட்விட்டர் பக்கத்திலும் வந்திருந்தது. இந்நிலையில் அந்த ட்விட்டர் பதிவின் கீழ் ட்விட்டர்வாசி ஒருவர் ஆபாசமாக கமண்ட் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

டேக் செய்து பதிவிட்ட நபர் :

“ii aime” என்ற ட்விட்டர் பயனர், பிரியா இந்த இடத்திற்கு பல செயல்கள் செய்துதான் வந்துள்ளார் என்று அநாகரீகமான வார்த்தைகளை தீட்ட பதிவு ஒன்றை போட்டிருந்தார். இந்த பதிவினை பிரபல ட்விட்டர் பயனாளியான “பரம்பொருள்” என்பவர் இவர் போட்டிருந்த ட்விட்டை சுட்டி காட்டி இந்த வக்கிரமான பதிவு செய்த @ii_aime கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டியவர் என்று பல அரசியல்வாதிகள், காவல்துறை, ஊடகங்கள் என பலரையும் டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

சிக்கலில் சிக்கிய நபர் :

இந்நிலையில் இந்த பதிவு வைரலாகவே சென்னை மேயர் பிரியாவை அநாகரிகமாக பதிவிட்டிருந்த “ii aime” என்பவரை புதுச்சேரியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் உட்பட பல ஆன்லைன் பயனர்கள் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் என்று தங்களுடய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை மீடியா வரை சென்றதால் “ii aime” என்பவர் தன்னுடைய ட்விட்டர் கணக்கி நீக்கி விட்டு இணயத்தை விட்டு வெளியேறிவிட்டார். இந்நிலையில் “ii aime” என்பவரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement