இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் பல வருடமாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர்கள் காதலிப்பது மட்டும் இல்லாமல் சினிமாவிலும் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி இருந்தார்கள். இதன் மூலம் இவர்கள் பல படங்களை தயாரிப்பது மட்டுமில்லாமல் வெளியிட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் இன்று நயன்தாரா-- விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ராக்கி. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா, ரோகினி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தர்புகா சிவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தேசிய விருது இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் வசந்த் ரவி.
ராக்கி குவித்த விருதுகள் :
இவரின் இரண்டாவது படம் தான் ராக்கி. முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் பிரமோஷனில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காலம் ஒரு துரோகி என்ற டைட்டில் பாடலில் தோன்றி இருந்தார். ஹாலிவுட் ஹீரோயின் போல் மாஸான கெட் அப்பில் அவர் நடித்து இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/ArunMatheswaran/status/1473887947749412866
திரையரங்கில் இருந்த இரண்டே நபர்கள் :
இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் திரை அரங்கில் இரண்டு நபர்கள் மட்டுமே இந்த படத்தை பார்க்க வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இயக்குனர் கொடுத்த நெகிழ்ச்சியான பதில் :
அதனை அந்த நபர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியிருப்பது, பெரிய ஸ்க்ரீனில் பிரைவேட் ஸ்கிரீன் என்று நினைத்து பாருங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. ஏனென்றால் இயக்குனர் எந்த வருத்தமும் காட்டவில்லை. ஆனால், அவருக்கு நம்பிக்கை இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரசிகர்கள் ஆதரவு :
இவர்களின் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பின் ராக்கி தயாரிப்பாளரின் பதிலுக்கு மாயா புகழ் இயக்குனர் அஸ்வின் சரவணன் மற்றும் பலரும் பதிலளித்துள்ளனர். அதே போல இயக்குனரின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாளில் இந்த படத்தை மிஸ் செய்துவிட்டோம் என்று கூறுவார்கள் என்று கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.





