என் படத்துக்கு இத்தனை கோடி வேணும், ஆனால் இத்தனை லட்சம் தான் வந்திருக்கு மீண்டும் வீடியோ வெளியிட்ட செம்பருத்தி சீரியல் நடிகர்

0
5544
karthi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் கார்த்திக். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது செம்பருத்தி சீரியல் தான். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து விலகினார் கார்த்தி. செம்பருத்தி தொடருக்கு பின்னர் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், என்னை எந்த படத்திலும் வேலை செய்யவிடாமல் கெடுக்கிறார்கள். அதானல் நானே ஒரு சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து படம் நடிக்க இருக்கிறேன். அதற்கு உங்களால் முடிந்த உதவிகளை அனுப்புங்கள் என்று வங்கி விவரங்களையும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள கார்த்தி தன்னுடைய படத்திற்கு இரண்டு கோடி ரூபாய் தேவை என்றும் ஆனால் இதுவரை 7 முதல் 8 லட்சம் தான் வந்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். மேலும், எனக்கு ஒரு ஒரு லட்சம் பேர் ரசிகர்கள் இருப்பார்கள் அவர்கள் அனைவரும் 100 முதல் 150 ரூபாய் கொடுத்தாலே நான் பணம் பண்ணுவதற்கான பணம் வந்துவிடும்.

- Advertisement -

அதேபோல இதற்கு ஒரு ஒரு வாரம் நேரம் வைத்துக்கொள்வோம் இந்த ஒரு வாரத்தில் படத்திற்கு தேவையான பணம் வரவில்லை என்றால் நான் படம் பண்ணாமல் போய் விட்டாலோ எனக்கு பணம் கொடுத்தவர்கள் அனைவரிடமும் பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் அதேபோல நான் நீங்கள் கட்டாயம் பணம் போட்டே ஆகவேண்டும் என்று சொல்லவில்லை..என்னுடைய ரசிகர்களிடம் மட்டும் தான் கேட்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

கார்த்தியின் இந்த வீடியோவிற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் நீங்கள் படம் நடிப்பதற்கு நாங்கள் ஏன் பணம் தரவேண்டும் ? அதுவும் இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் நீங்கள் படம் நடிப்பீர்களா என்று விமர்சனம் செய்து வருகின்றனர். ஏற்கனவே பரிதாபங்கள் கோபி சுதாகர் இதே போல படம் எடுப்பதாக கூறி ரசிகர்களிடன் பணத்தை பெற்றனர். ஆனால், இது வரை அந்த படம் என்ன ஆனது என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement