உதயநிதி ஸ்டைல்ல சினிமாவில் களமிறங்கும் Ops மகன் ரவீந்திரன்.

0
735
udhayanidhi
- Advertisement -

உதயநிதி பாணியில் சினிமாவில் களமிறங்கும் இருக்கும் மிக பிரபலமான அரசியல்வாதியின் மகன் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரு கலக்கு கலக்குகிறார் உதயநிதி ஸ்டாலின் . இவர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்தும் பட்டைய கிளப்பி வருகிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் குருவி படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் ஆதவன் படத்தின் தயாரிப்பாளராகவும் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து உதயநிதி நான்கு படங்களை தயாரித்தார்.

-விளம்பரம்-

பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உதயநிதி களம் இறங்கினார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் நடுவில் சில படங்கள் தோல்வியை சந்தித்தது. இருந்தும் விடா முயற்சியினால் இவரது நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல கண்ணேகலைமானே, சைக்கோ போன்ற படங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது.

- Advertisement -

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்கள்:

தற்போது உதயநிதி அவர்கள் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் உதயநிதி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அரசியலில் உதயநிதி பங்கு:

இப்படி தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் உதயநிதி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் மகன் தான் உதயநிதி ஸ்டாலின். அதோடு இவர் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவார். இப்படி உதயநிதி ஸ்டாலின் சினிமா தயாரிப்பு, நடிப்பு, கட்சி, அரசியல் என ஆல்-ரவுண்டராக கலக்குவது எல்லோருக்குமே தெரியும்.

-விளம்பரம்-

ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் பங்கு:

இது அரசியலில் இருக்கும் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் ஆசையும் தூண்டிவிடுகிறது. இந்த நிலையில் உதயநிதி போலவே மிக பிரபலமான அரசியல்வாதியின் மகன் சினிமாவில் களம் இறங்கியிருக்கிறார். அவர் வேற யாரும் இல்லைங்க, இரவீந்திரநாத் குமார். இவர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஆவார். அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் பன்னீர்செல்வம். இவரை ஓபிஎஸ் என்று தான் என்று அனைவரும் செல்லமாக அழைப்பார்கள். இவர் மூன்று முறை தமிழக முதலமைச்சராகவும், தமிழக துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

சினிமாவில் களமிறக்கும் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன்:

இந்நிலையில் இவருடைய மகன் ரவீந்திரநாத் குமார் தான் சினிமாவில் கால் தடம் பதித்திருக்கிறார். ரவீந்திரநாத் தேனியின் எம்பி யாக இருக்கிறார். தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், இவர் தரமான படங்களை தயாரிப்பதற்கும் ,கௌரவமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதற்கும் விரும்புவதாக இவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement