இந்தியாவின் டாப் 10 நடிகைகள் – No.1 சமந்தா No.3ல் நயன். நேஷனல் கிரஸ் ராஷ்மிகாவிற்கு No இடம்.

0
755
actress
- Advertisement -

பிரபலமான டாப் 10 நடிகைகள் பட்டியலில் நேஷனல் க்ரஸ் என்று ரசிகர்களால் கொண்டாப்படும் ராஷ்மிகா மந்தனா இடம் பெறவில்லை. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு என்று அதிக ரசிகர் பட்டாளம் இருக்கிறது. உலகம் முழுவதும் பாலிவுட் நடிகர்களுக்கு என்று பெரும் புகழ் இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் சுக்குநூறாக உடைக்கும் வகையில் லேட்டஸ்டாக கணிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Samantha

அதாவது, வருடம் வருடம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் பட்டியல் வெளியாகும். அந்த வகையில் ‘ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ்’ என்ற நிறுவனம் இந்தியாவில் மிகவும் பிரபலமான திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இது ஜூன் மாதத்தில் பிரபலமாக இருந்த நடிகைகளின் பட்டியலாகும். அதில், நடிகர் விஜய் முதலிடம் பிடித்திருக்கிறார். மேலும், டாப் 5 லிஸ்டில் தென்னிந்திய பிரபலங்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

அதேபோல் இந்திய நடிகைகள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் பாலிவுட் நடிகைகள் முதலிடத்தை பிடிக்க வில்லை. முதலிடத்தை தென்னிந்திய நடிகை சமந்தா தான் பிடித்திருக்கிறார்.

2 ஆலியா பட்

-விளம்பரம்-

3 நயன்தாரா

4 காஜல் அகர்வால்

5 தீபிகா படுகோன்

6 பூஜா ஹெக்டே

7 கீர்த்தி சுரேஷ்

8 காத்ரினா கைப்

9 கீரா அத்வானி

10 அனுஷ்கா

ஆனால், நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கு பட்டியலில் இடம் பெறவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்று சொல்லலாம். தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

rashmika

தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமாகி இருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. இதனை அடுத்து இவர் பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் ராஸ்மிகா நடித்து வருகிறார்.

இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தற்போது இந்த படத்தின்வேலைகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. இதனை அடுத்து சில படங்களில் ராஷ்மிகா மந்தனா கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement