‘ஒரு தலை ராகம்’ சங்கர் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் டி.ராஜேந்தர். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் 1980 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் கதை, வசனம் எழுதி இயக்கி வெளியாகி இருந்த படம் ஒருதலை ராகம்.
இந்த படத்தை இ.எம் இப்ராஹிம் தயாரித்திருந்தார். அதோடு அப்போதெல்லாம் இளையராஜாவின் இசையில்லாமல் எந்த படங்களுமே வெளிவராது. ஆனால், இந்த ஒரு தலை ராகம் படத்தில் இளையராஜாவின் இசை இல்லாமல் வேறு ஒருவரை வைத்து டி ராஜேந்தர் இயக்கி இருந்தார். இருந்தும் அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் சங்கர், ரூபா, உஷா ராஜேந்தர், தியாகு, சந்திரசேகர், ரவீந்தர் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
ஒருதலை ராகம் படம்:
இந்த படம் முழுக்க முழுக்க காதல் சோகத்தை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருந்தார். இந்த படம் 365 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனையும் படைத்திருந்தது. மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனவர் தான் சங்கர். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இவர் சின்ன வயதிலேயே சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டதால் பள்ளிப்படிப்பு எல்லாமே சென்னையில் தான் முடித்தார்.
சங்கர் குறித்த தகவல்:
இவர் ஒருதலை ராகம் படத்திற்கு பிறகு அதிகம் மலையாள மொழி படத்தில் தான் நடித்தார். இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பின் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மணல் நகரம்’ என்ற படத்தின் மூலம் இவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அந்த படத்தில் பிரஜின், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி, வருணா ஷெட்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இயக்குனர் சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஒருதலை ராகம் சங்கர் இயக்கிய படம்:
குடும்ப சூழ்நிலையின் காரணமாக வெளிநாட்டுக்கு செல்பவர்கள் அங்கு எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்துதான் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அதற்குப் பின் இவர் தமிழில் சரியான வாய்ப்புகள் வந்தால் வருவேன் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
ஒருதலை ராகம் சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம்:
அதோடு இவரை தமிழ் படங்களில் காணவே முடியவில்லை. இந்த நிலையில் ஒருதலை ராகம் சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரைப் பார்த்து ரசிகர்கள் பலரும், நீங்கள் மீண்டும் தமிழில் நடிக்க வருவீர்களா? என்றெல்லாம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.