ஒருதலை ராகம் நடிகையா இது..! டான்சர் தியாகம்.! காதல் கல்யாணம்.! எப்படி இருக்காங்க தெரியுமா.? போட்டோ இதோ

0
1021
oru-thalai-raagam

டி.ராஜேந்தர் இயக்கிய முதல் படம், `ஒருதலை ராகம்’ (1980). கதையையும் தாண்டி இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கக் காரணமாக அமைந்தது, படத்தில் இருந்த புதுமுகங்கள். ஏனெனில், நடித்த நடிகர்கள், கேமராமேன், இயக்குநர் எனப் பெரும்பாலானவர்கள் சினிமாவுக்குப் புதிதாக அறிமுகம் ஆனவர்கள். `ஒருதலை ராகத்து’க்குப் பிறகு அத்தனை நடிகர்களும் பின்னாளில் மக்களிடையே பிரபலமானார்கள். இந்தப் படத்தில் நடித்த நடிகை ரூபாவிடம் பேசினோம்.

Actress-pooja

உங்கள் முதல் படம், நண்பர்கள், சக்சஸ்?

ஹய்யோ… அந்த நாள்களை இப்போ நினைச்சுப் பார்த்தாலும் உடம்பு சிலிர்க்கும். எப்படி அது சாத்தியமாச்சுனு இப்போவும் ஆச்சர்யமாகப் பார்க்கிறேன். முதல் படம் எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. படம் ஹிட் அடிக்குமானு யாரும் யோசிக்கலை. கொடுத்த வேலையைப் பக்காவா செய்தோம். ஷூட்டிங் நேரம் தவிர மற்ற நேரங்கள் அரட்டைதான். லன்ச் டைம் செம்ம காமெடியாப் போகும். மாயவரத்தில் இருந்த ஒரு காலேஜ்லதான் `ஒருதலை ராகம்’ படத்தை ஷூட் பண்ணாங்க. நாங்க தினமும் காலேஜ் போற மாதிரிதான் ஷூட்டிங் போனோம். எந்தப் பந்தாவும் கிடையாது. அவ்வளவு நல்ல நாள்கள் அதெல்லாம்!

மறக்க முடியாத சம்பவங்கள் ஏதாவது இருக்கா?

நிறைய உண்டு. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு மறக்க முடியாத நிகழ்வுகள் நடக்கிறதுண்டு. `ஒருதலை ராக’த்தைப் பொறுத்தவரை என்னால் இப்போவும் நம்பமுடியாத மறக்க முடியாத ஒரு நிகழ்வு உண்டு. படத்துக்காகப் பூஜை போடுவதற்கு ஐயர் ஒருத்தர் வந்திருந்தார். பொதுவாக எல்லாப் படத்துக்கும் நல்லபடியாகப் படம் முடிந்து, நல்லா ஓடணும்னு சொல்லி ஆசீர்வதிக்கிறதுண்டு. ஆனால், அந்தப் படத்துக்கு பூஜை செய்தவர், `படம் சூப்பர் ஹிட் ஆகி, கோடி கோடியாகப் பணம் வரணும்’னு சொன்னார். `யார் இவர்? இப்போதான் எல்லோரும் அறிமுகம் ஆகுறோம். படம் எப்படிப் போகும்னு தெரியலை. அதுக்குள்ள கோடி கோடியா வசூலிக்குமாம்’னு சொல்லிக் கிண்டல் பண்ணோம். படம் ரிலீஸானப்போ, நான் ஊட்டியில இருந்தேன். போன் மேல போன். படம் சூப்பர் ஹிட்னு சொன்னப்போ, இந்தப் படத்துக்குப் பூஜை போட்டவர்தான் நினைவுக்கு வந்தார்.

Pooja

டி.ஆர் மற்றும் அந்தப் படத்தில் தோழியாக நடித்த உஷா இருவரிடையேயான நட்பு?

“உஷா எனக்கு ரொம்ப நெருக்கம். படத்துல நடிக்கும்போதே எங்க இரண்டு பேருக்குமான நட்பு ஸ்ட்ராங்கா இருந்தது. அந்தப் படத்துக்குப் பிறகுதான் டி.ராஜேந்தரும் உஷாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. `ஒருதலை ராகம்’ படத்தில் நடித்தபோது எங்களுக்கிடையே இருந்த நட்பு இப்போவரை தொடருது. அவங்க குடும்ப விழாக்களுக்கு என்னைக் கூப்பிடுவாங்க. ஆனா, அவங்க குழந்தைகள்கிட்ட அதிகம் பேசினது கிடையாது. தமிழ்த் திரையுலகின் சிறந்த ஜோடினு அவங்களைச் சொல்லலாம்.

தமிழில் ஒரு படத்தில்கூட டான்ஸராக நடிக்கவில்லையே ஏன்?

அதுக்குத் தடையாக இருந்தது, `ஒருதலை ராகம்’ போன்ற படங்கள்தாம். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் சேலைகட்டி பவ்யமான பெண்ணாக நடிச்சிட்டேன். அதனால, என்னை எல்லா ரசிகர்களும் அப்படியே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த நேரத்தில் டான்ஸர், கிளாமர் ஆர்ட்டிஸ்ட் என வந்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என இயக்குநர்களும் எனக்கு ஹோம்லி கேரக்டர்களையே கொடுத்துட்டாங்க. கடைசிவரை தமிழில் ஒரு படத்தில்கூட டான்ஸராக நடிக்க முடியலையே என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. மற்றபடி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட எல்லா ரோல்களிலும் நடிச்சிருக்கேன்.

pooja-actress

உங்கள் குடும்பம், கரியர்?

இப்போது, கன்னட சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன். கூடவே, படங்களும் பண்ணிட்டு இருக்கேன். மகன் இப்போ காலேஜ் படிச்சிட்டு இருக்கார். எங்களுடையது காதல் திருமணம் என்பதால், எங்க வாழ்க்கை ரொம்ப திருப்தியாப் போயிட்டு இருக்கு” என்கிறார் சந்தோஷம் பொங்க!