தன்னுடன் நடிக்க மாட்டேன் என்று விஜயகாந்த் சொன்னதாக நடிகை ஊர்வசி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. விஜயகாந்த் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் .
பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு விஜயகாந்த் குறித்து பல விஷயங்கள் பகிரப்பட்டது. இதனை அடுத்து விஜயகாந்தின் திருவுருவ படம் திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி:
இதில் பிரேமலதா மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் பிரேமலதா தன்னுடைய கணவர் விஜயகாந்தின் இறுதி நாட்கள் குறித்து கணவர் இருந்தார். அதன் பின் தொண்டர்களை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்னையாக தான் இனி என்னுடைய வாழ்க்கை இருக்கும். இனி மக்களுக்காக தான் என்னுடைய வாழ்க்கை என்று கூறி இருந்தார். மேலும், விஜயகாந்த் குறித்து பிரபலங்கள் பலருமே பேட்டி கொடுத்து வருகிறர்கள்.
ஊர்வசி பேட்டி:
இந்த நிலையில் விஜயகாந்த் குறித்து நடிகை ஊர்வசி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், என் உடன் விஜயகாந்த் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். காரணம், அவர் என்னை தங்கை என்று எப்போதுமே அழைப்பார். அதனால் படத்தில் எப்படி அவருடன் நெருங்கி நடிக்க முடியும் என்று சொல்வார். அது மட்டும் இல்லாமல் நான் அவரிடம் ஒரு சில படங்களில் தான் நடித்திருக்கிறேன்.
விஜயகாந்த் குறித்து சொன்னது:
அப்போதும் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் என் முகத்தை கூட பார்க்க மாட்டார். நல்ல மனிதர். அந்த பொண்ணு வெள்ளையாக இருக்கிறது. நான் எப்படி இருக்கிறேன்? என்றெல்லாம் கிண்டல் அடிப்பார். எல்லோருக்குமே சாப்பாடு போட்ட வள்ளல். ஷூட்டிங்கில் அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதை தான் அனைவருக்குமே கொடுக்கிறார். ஆரோக்கியமான உணவுகளை தருவார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சூட்டிங் மட்டும் இல்லாமல் மற்ற ஷூட்டிங்கில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார். உண்மையாலுமே கேப்டன் கேப்டன் தான் என்று கூறியிருந்தார்.
ஊர்வசி குறித்த தகவல்:
தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நகைச்சுவையும் செய்யலாம் என்பதை நிரூபித்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தற்போது ஊர்வசி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஊர்வசி நடித்திருந்த படம் அப்பத்தா.