தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரிச்சா காங்கோபாதியாய். டில்லியைச் சேர்ந்த மாடல் அழகி ரிச்சா கங்கோபாத்யாய. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். 2007ம் ஆண்டில் மிஸ் இண்டியா இன் அமெரிக்கா அழகி போட்டியில் டைட்டில் வென்றவர். தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.தமிழில் மயக்கம் என்ன , ஒஸ்தி ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடித்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். எம்பிஏ படித்துள்ள ரிச்சா, பிசினஸ் ஸ்கூல் ஒன்றில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் வெளிநாட்டைச் சேர்ந்த ஜோ என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது சமூக வளைத்ததில் அறிவித்திருந்தார்.
இதையும் பாருங்க : இதுக்கு தான் ஸ்மார்ட் போன் வாங்கி இருக்காரா சீனி பாட்டி. செந்தில் பகிர்ந்த பல தகவல்கள்.
இந்த நிலையில் ரிச்சா மற்றும் ஜோ திருமணம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. ரிச்சா குடும்பத்தினர் சார்பாக இந்திய முறைப்படியும் அவரது கணவர் குடும்பத்தின் சார்பாக கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சினிமா துறையை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் தான் இந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.ரிச்சாவின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதனால் திரை உலகை சார்ந்த பலரும் ரிச்சாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீப காலமாகவே நடிகைகள் பலரும் வெளிநாட்டை சார்ந்த நபர்களை திருமணம் செய்துகொண்டு வருகின்றனர். பிரியங்கா சோப்ரா, இலியானா, ஷ்ரேயா என்று பலரும் வெளிநாட்டை சார்ந்தவர்களை தான் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ரிச்சாவும் வெளிநாட்டை சார்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். இது என்ன புது ட்ரெண்ட் போல