பிக் பாஸ் புகழ் ஓவியா, தற்போது மது குடித்துக்கொண்டே போட்ட பதிவுதான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஓவியா. இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்குப்பின் விமல் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ‘களவாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் ஓவியா நடித்திருந்தார். ஆனால், இவருக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும், இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு மலையாளத்தில் ‘கங்காரு’ என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், ஒரு சில படங்களில் ஓவியா குத்தாட்டம் போட்டிருந்தார். பின்னர் சினிமாவில் கொஞ்சம் காலம் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர், 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக் பாஸ் சீசன் 1:
‘பிக் பாஸ் 1’ சீசனில் பங்கு பெற்ற மற்ற போட்டியாளர்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து. அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம்தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அது மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கு ஆர்மி என்ற ட்ரெண்ட் இவரால்தான் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இவருடைய எதார்த்தமான குணமும், பேச்சும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது என்றுதான் கூற வேண்டும்.
பிக் பாஸுக்கு பிறகு:
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியா பெரிய நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின் சிலுக்குவார்பட்டி சிங்கம், 90 எம்எல், கணேஷா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, களவாணி 2 போன்ற படங்களில் ஓவியா நடித்தார். ஆனால், அவர் நடித்த படங்கள் அந்த விஷயத்தை காலி செய்து விட்டது. முக்கியமாக 90 எம்எல் என்ற ஒரே படம் அவரது கேரியரை காலி செய்து விட்டது என்று தான் கூற வேண்டும். அதற்குப் பிறகு ஓவியா பெரிதாக படங்களில் கமிட்டாகவில்லை.
ஓவியாவின் பதிவு:
இந்நிலையில், தற்போது ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில், ஓவியா மது குடித்துக் கொண்டே ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கூறி இருக்கிறார். தான் குடிக்கும் போட்டோவை பகிர்ந்து, ‘ Drinking is injurious to health’ என்ன கேப்ஷன் வைத்துள்ளார். அதாவது, ‘மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதைப் பார்த்த அவரின் பாலோயர்ஸ் கமெண்ட்களில் ஓவியாவை வருத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்:
அதாவது, ஓவியாவின் இந்த பதிவை பார்த்து ஒரு பக்கம் ‘உங்களை ஃபாலோ பண்றது வேஸ்ட். அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை’. ஓவியாவிற்கு ஓவரா வயசாயிடுச்சு என்றும் திட்டி பதிவிட்டுள்ளனர். மறுபக்கம், நீங்கள் தான் எங்களுடன் உண்மையாக இருக்கிறீர்கள். உங்க வாழ்க்கையில் சந்தோஷமாக இருங்கள் என்று ஓவியாவிற்கு ஆதரவாக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.