எனக்கு தம் அடிக்கற பழக்கம் இருக்கு அதுக்கு என்ன.! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஓவியா.!

0
1787
Oviya-helan
- Advertisement -

பிக் பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பேரும் புகழும் ஏற்படுத்தி தந்தது அந்த நிகழ்ச்சி என்பது தான் உண்மை.

-விளம்பரம்-

இருப்பினும் அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு எந்த ஒரு பட வாய்ப்பும் இவரை தேடி வரவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது ஓவியா 90 Ml படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து.

- Advertisement -

இந்த படத்தின் ட்ரைலரில் ஓவியா, புகைபிடிப்பது தண்ணி அடிப்பது, லிப் லாக் என்று நடித்துள்ளதால் ஓவியாவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆனால், எதிர்மறையான எந்த விடயத்தையும் காது கொடுத்து கேட்காமல் இருந்து வருகிறார் ஓவியா.

சொல்லப்போனால் இந்த படத்திற்கு பிறகு ஓவியா பல ரசிங்கர்களை தான் இழந்துள்ளார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியவிடம், இந்த படத்தில் புகைபிடிப்பது பற்றி கேட்கப்பட்டது. பின்னர் உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா என்றும் கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

அதற்கு பதிலளித்த ஓவியா, படங்களில் ஹீரோக்கள் புகைபிடிப்பது இல்லையா அதெல்லாம் தவறு இல்லையா. நான் பல முறை கூறி விட்டேன் இது வெறும் படம் தான் என்று. ஒரு நடிகையாக என்னை பின் தொடராதீர்கள். தனிப்பட்ட முறையில் நான் மிகவும் ஒளிக்கமாக தான் நடந்து வருகிறேன் அதை பின்பற்றுங்கள்.

இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை தான் நான் கொடுத்துள்ளேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரும் சரி அதற்கு பிறகும் சரி எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது உண்மை தான் அதற்கு என்ன இப்போ. ஆனால்,
கை பிடித்தால் என்ன வரும் என்பதைப் புரிந்துகொண்டு புகை பிடிக்கும் பழக்கத்தை நான் தற்போது நிறுத்திவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement