தயாரிப்பாளருக்கு தானாகவே உதவ முன்வந்த ஓவியா !

0
2187
oviya

ஓவியாவின் ரசிகர்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காமல் அதிகரித்து கொன்டே இருக்கிறது. வயது வித்தியாசம் இன்றி அனைவர்க்கும் அவரை பிடித்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் பிக் பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதமும் அவரது நேர்மையும் தான்.

oviya-kamalஇந்த நிலையில் ஓவியா நடிப்பில் சீனு என்ற பெயரில் தயாராகி வந்த ஒரு படம் தற்போது ஓவியாவை விட்டா யாரு சீனி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் மதுரை செல்வம் படத்தை வெளியிட மிகவும் கஷ்டப்பட்டு வருகிறாராம்.

Aarav-chooses-Oviya

இந்த தகவலை தெரிந்து கொண்ட ஓவியா தயாரிப்பாளருக்கு போன் செய்து, நீங்கள் கவலைப்படாதீர்கள், படம் எப்போது என்று சொல்லுங்கள் புரொமோஷனுக்கு நான் வருகிறேன். நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

oviyaபணம் கொடுத்தால் தான் புரொமோஷனுக்கு வருவேன் என்று பலர் கூறும் நிலையில் ஓவியா அப்படி சொன்னது தனது உதவியாக இருந்ததாக தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.