ஓவியாவின் தற்போதைய நிலை என்ன என்று தெரியுமா ?

0
2936
oviya

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓவியாவிற்கு முன் ஓவியாவிற்கு பின் என மிக சுலபமாக பிரிக்க இயலும். ஓவியாவிற்காக மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் அளவிற்கு ஓவியாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்ததது. OviyaArmy, ஓவியா புரட்சிப்படை என்று தினம் தினம் சமூக வலைத்தளங்களில் அவர் தான் ட்ரெண்ட்.

oviya

ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதை பலராலும் ஏற்க முடியவில்லை. அதன் பிறகு பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் தொலைக்காட்சியின் TRP கணிசமான எண்ணிக்கையில் குறையவும் செய்தது.

oviya-kamal

பிக் பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேறிய ஓவியா, ஒரு நாள் முழுவதும் சென்னையில் தான் இருந்தார். சென்னை சிட்டி சென்டரில் ரசிகர்களுடன் பேசினார் புகைப்படம் எடுத்து கொண்டார்.

மற்ற நபர்களை போல் முந்தைய நிகழ்ச்சியை Hotstar-இல் பார்க்காமல் தைரியமாக வெளியில் சுற்றி கொண்டு ரசிகர்களுடன் பழுகுவதை பார்க்கும் போதே அவர் பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு நேர்மையாக நடந்து கொண்டுள்ளார் என்பது புரிகிறது.

அன்று இரவே ஓவியா விமானம் மூலம் கேரளா சென்றார். விமான நிலையத்திலும் அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

அதன் பிறகு புதிய hair ஸ்டைலுடன் காதியளித்தார் ஓவியா. பிறகு தான் புரிந்தது அவர் மண அழுத்தத்திற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்று.

இப்போது ஓவியா அவரது நண்பர்களுடன் கேரளாவில் பொழுதை கழித்து வருகிறார். அவர் யாருடைய தொலைபேசி அழைப்பையும் எடுப்பதில்லையாம். பிக் பாஸ் பற்றி பேசுவதில் எந்த வித ஆர்வத்தையும் அவர் காட்டவில்லையாம். கூடுமானவரை பிக் பாஸ் பற்றி பேசுவதை தவிர்த்து வருகிறாராம்.

ஓவியாவை வர வைக்க தொலைக்காட்சி பல முயற்சிகள் எடுத்து வருகின்றது, நாள் ஒன்றிற்கு பல லட்சம் சம்பளம் வரை தொலைக்காட்சி சார்பாக தார்வதாகவும் வாக்களித்துள்ளனர். ஆனால், இதுவரை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் என்று ஓவியாவிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லையாம்.

தொலைக்காட்சி சார்பாகமட்டுமில்லாமல் பல தயாரிப்பாளர்கள், பல இயக்குனர்கள் ஓவியாவின் வருகைக்காக காத்து கொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியா நடித்து வெளிவரும் படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்பது தயாரிப்பாளர்களின் கருத்து.