போகும்போது கூட ஓவியாவை குறை சொல்வதா? சக்தி மீது பாயும் ஓவியா ரசிகர்கள்

0
2045
sakthi
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து சக்தி நேற்று கமல் முன்னிலையில் வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுபவரிடம் கமல் சில கேள்விகளை கேட்பது வழக்கம். அவ்வாறு, இந்த வீட்டில் துவக்கத்திலிருந்தே உங்களுக்கு பிடிக்காத நபர் யார் என்று கேட்டார் ? கமல். அதற்கு சக்தி ‘ஓவியாவைச் சொல்வேன் என்றார்.  அவர் செய்த சில விஷயங்கள் பிடிக்கவில்லை. அடிச்சிடுவியா என்பது போல் பக்கத்தில் வந்து நின்னாங்க என்றார்.

- Advertisement -
sakthi-biggboss

பொதுவளியில் ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிப்பேன் என்று சொன்னால்,  சுயமரியாதையும் தைரியமும் உள்ள ஒரு பெண், எங்க அடி பாப்போம் என்று தான் சொல்வார்கள். ஓவியா அன்று செய்ததில் எந்த ஒரு தவறும் இருப்பதாக தெரியவில்லை.

sakthi-kamal

உன்னை அறைந்து விடுவேன் என்று சக்தி சொன்னதால் தான் ஓவியா அடி பாப்போம் என்று கூறினார். ஆகையால் அறைந்து விடுவேன் என்று கூறிய சக்தி இதில் தவறு செய்தவர், என்பதை சக்தி உணர வேண்டும்.

-விளம்பரம்-

மொத்த வீடியோக்களையும் பார்த்த பிறகு சக்தி இதை உணர்வார் என நம்புவோம். அல்லது அவருடைய சுற்றத்தாராவது அவருக்கு இதை உணர்த்த வேண்டும். காயத்ரியைப் போலவே சில விஷயங்களில் தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் குணம் சக்திக்கு இருக்கிறது.

sakthi kamal

‘அவங்க என்னை ட்ரிக்கர் பண்ணிட்டே இருந்தாங்க’ என்று கூறி சக்திசிக்கி கொண்டார். பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். அவர்கள் தன்னைப் பாராட்டுகிறார்கள் போல என தவறாக நினைத்துக் கொண்ட சக்தி மேலும் உற்சாகமாகப் பேச முயல, இடைமறித்த கமல் ‘நீங்க வெளியே போனவுடன் இதைப் புரிந்து கொள்வீர்கள்’ என்றார்.

பிறகுதான் சக்திக்கு புரிந்தது, இந்த வார்த்தையுடன் இணைத்து தன்னைக் கலாய்த்திருக்கிறார்கள் என்பது. எப்படியிருந்தாலும் போகும்போதும் ஓவியா பற்றி தவறான புரிதலுடனே சக்தி போனது ஓவியா ரசிகர்களுக்குக் கொலைவெறியை உண்டாக்கிவிட்டது.

Advertisement