புத்தாண்டு அன்று மீண்டும் தங்கள் காதலை உறுதி செய்த ஆரவ்-ஓவியா..!

0
925
Oviya-Arav

கடந்த ஆண்டு விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜோடி ஓவியா மற்றும் ஆரவ் தான். பிக் பாஸ் நிகழ்ச்சி யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

சொல்லப்போனால் ஓவியாவால் தான் ஆரவும் பிரபலமடைந்தார் என்பது தான் உண்மை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா ஜோடி தான் பிக் பாஸ் வீட்டின் லைம் லைட்டாக இருந்து வந்தனர்.ஆரவ்விடம் காதல் வலையில் விழுந்த ஓவியா, ஆரவ் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்ததும் மிகவும் நொந்து போனார்.

இதையும் படியுங்க : ஓவியாவை ஆரவ் செல்லமாக இப்படி தான் அழைப்பாரோ..! 

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் ஆரவ் மற்றும் ஓவியாவின் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இருவரும் சேர்ந்து ஊர் சுற்றிய வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் உலா வந்தது. அதே போல தனது பிறந்தநாளை கூட ஆராவுடன் தான் கொண்டாடினார் ஓவியா.

இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். ஆரவ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் “இப்போது இந்த வருடம் அமைதியாக முடியும் என நம்புகிறேன்” என கூறி லவ் ஸ்மைலி பதிவிட்டுள்ளார். மேலும் #Araviya என இரண்டு பேரின் பெயரையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் காதல் இன்னும் இருக்கிறது என்று வலைதளவாசிகள் உறுதிபடுத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement