அது உங்கம்மா.! பதிலடி தறுகிறேன் என்று அஜித் ரசிகரை மோசமாக பேசிய ஓவியா.!

0
996
Oviya-Ajith
- Advertisement -

பொதுவாக நடிகைகள் அவ்வப்போது சமூகவலைதளத்தில் லைவ் சாட்டில் தோன்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பது வழக்கும். அப்படி பதிலளிக்கும்போது ரசிகர்களின் ஒருசில எரிச்சலூட்டும் கேள்விகளால் நடிகைகள் சிலர் ரசிகர்களை மோசமாக திட்டி விடுகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஓவியா ரசிகர் ஒருவரை மிக மோசமாக திட்டி உள்ளார். தமிழில் ‘களவாணி’ படத்தில் அறிமுகமான நடிகை ஓவியா அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் , இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி தந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

இதையும் படியுங்க : நீ முன்ன மாதிரி இல்ல பாப்பு.! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வரும் ரம்யா.! 

- Advertisement -

எப்போதும் மற்றவர்களை பற்றி கவலைப்படாத ஓவியா, தன்னைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தாலும் அதை பற்றி கண்டுகொள்வதுமில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 90Ml திரைப்படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால், படத்தை பிடித்தால் பாருங்கள் இல்லையேல் பார்க்காதீர்கள் என்று சிம்பிளாக கூறியிருந்தார் ஓவியா.

இந்த நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்த அந்த ஓவியவிடம், ரசிகர் ஒருவர் ‘என்னை திருமணம் செய்து கொள்வீர்களா’ என்று கேட்டார். அதற்கு அஜித் புகைப்படத்தை டிபி ஆக வைத்திருந்த ரசிகர் ஒருவர் ஓவியாவை ஐட்டம் என்று விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி தருவதாக எண்ணி ‘ஐட்டம் உங்க அம்மாதான்’ என்று ஓவியா மிக மோசமாக பதில் அளித்திருந்தார். இதில் பிரச்சினை என்னவெனில் அஜித்தின் புகைப்படத்தை டிபியாக வைத்த நபரை திட்டியதால் அஜித் ரசிகர்கள் என் மீது கடுப்பில் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement