சர்ச்சையை கிளம்பியுள்ள 90Ml பட ட்ரைலர்.! இரட்டை வசனத்தில் பதிலளித்த ஓவியா.!

0
717
90Ml

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் யாருக்கு பெரும் புகழையும் சம்பாதித்து தந்ததோ இல்லையோ, ஆரவிற்கும், நடிகை ஓவியாவிற்கும் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்து. தற்போது நடிகை ஓவியா ’90ML’ என்ற படத்தில் நடித்துள்ளார். 

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘குளிர் 100′ என்ற படத்தை இயக்கிய அனிதா உதீப் ஓவியா நடிக்கும் ’90ML’ இயக்குகிறார். Nviz எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்த  படத்திற்கு நடிகர் சிம்பு தான் இசையமித்துள்ளார். அதோடு இந்த படத்தில் ஒரு கௌவரவ தோற்றத்திலும் நடிக்க போகிறாராம் நடிகர் சிம்பு.

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அந்த டீசரில் படு மோசமான வசனங்களும், முத்தக் காட்சிகளும் இடம்பெற்றதால் ஓவியாவின் ரசிகர்கள் அதிர்ந்து போகினர். இந்நிலையில் இந்த படம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் டீவீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தை பார்க்காமல் யாரும் குறை சொல்ல வேண்டாம் என்று ஓவியா கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு பழத்தை சுவைப்பதற்கு முன்பாக அதன் விதையை தீர்மானிக்காதீர்கள். படத்திற்கு தணிக்கை சான்று வரும் வரை பொறுத்திருங்கள். இப்போதைக்கு அடல்ட் 90ml ட்ரைலரை என்ஜாய் பண்ணுங்க என்று பதிலளித்துளளார்.