பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் கோபி இல்லை, இவர் தானா.!அப்படியே பேசுராறு பாருங்க.!

0
46009
Gopi-Nair

விஜய் டிவியில் ஒளிபரபாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ப்ரோமோ வீடியோவில் கேட்கும் குரல் மக்களுக்கு மிகவும் பரிட்சியமான ஒரு குரலாக இருந்து வருகிறது. “பிக் பாஸ் தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்” என்ற Promo-வில் கம்பீரமான குரலுக்கு பின்னால் இருக்கும் அவரது முகத்தை இதுவரை பெரும்பாலானோர் கண்டதில்லை.

அந்த பிரம்மாண்ட குரலுக்கு சொந்தக்காரரின் பெயர் கோபி நாயர் என்பது மட்டுமே நமக்கு தெரியும். கோயம்பத்தூரை சேர்ந்த இவர் 2000 ஆம் ஆண்டு வேலை தேடி சென்னை வந்துள்ளார். முதலில் இயக்குனராக வர வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்த இவருக்கு, இவரது குரல் வளத்தை கண்டு டப்பிங் ஆர்டிஸ்டாக வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வந்த இவருக்கு விஜய் டிவியில் டப்பிங் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் பாருங்க : சிம்பு, மீரா மிதுனுக்கு ப்ரொபோஸ் செய்தாராம்.! ஷாக் கொடுத்த தர்ஷனின் காதலி.! 

ஆனால், இவர் பிக் பாஸ் ப்ரோமோவிற்கு மட்டும் தான் குரல் கொடுத்து வருகிறார். அதே போல கடந்த ஆண்டே பிக் பாஸ் குரல் என்னுடையது இல்லை என்று பல பேட்டியில் கூறியிருந்தார் கோபி. இதனால் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தான் என்று ரசிகர்கள் மண்டையை பிச்சுக்கொண்டு இருக்கின்றனர்.

Image result for news reader ranjith

ஒரு சிலரோ அந்த பிக் பாஸ் குரல் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோகுலுடையது என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் பிரபல செய்தி தொகுப்பாளர் ரஞ்சித் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பிக் பாஸ் போலவே பேசி ஆச்சர்ய[பட வைத்தார். இதனால் இவர் தான் பிக் பாஸ் குரலின் சொந்தக்காரரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.