சனாதன பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியில் தலையிட விரும்பவில்லை. எம்மதமும் சம்மதம் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு – ப.சிதம்பரம்.

0
883
- Advertisement -

சில தினங்களுக்கு முன்னாள் தமிழகத்தின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனதை ஒழிப்போம் என்றும் சனாதனதையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதற்க்கு தமிழகத்தை விட வட இந்தியாவில் பெரும் பேசு பொருளாக மாறியது. அதற்க்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அது குறித்தும் நேற்று இன்று நடைபெற்று வரும் ஜி20 மாநாடு குறித்தும் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

சமீபகாலமாகவே இந்தியாவில் சனாதான ஒழிப்போம் மற்றும் சனாதன ஆதரவாகவும் கருத்துக்கள் எழுந்து வருகிறது. இது குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதானது இந்தியா முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியது இது குறித்து  முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸின் மூத்த உறுப்பினருமான பா.சிதம்பரம் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். வடநாட்டில் சமாதானம் என்பது இந்து மதம் தான் தமிழகத்தில் சனாதனம் என்பது சாதியவாதம் என்றும் அவர் விளக்கம் அளித்தார் சனாதனம் குறித்து சர்ச்சையில் நாம் சிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

- Advertisement -

ப.சிதம்பரம் கூறியது

காரைக்குடியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் இன்று நடைபெற்ற வந்திருக்கும் ஜி 20 மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறோம் கூறினார். ஆனால் குடியரசுத் தலைவரின் விருந்து நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித்  தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூனே கார்கேக்கு அழைப்பு விடுக்கபடதாது ஜனநாயக விரோதம் என்றும் கூறினார். இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றால்  இந்திய ஜனநாயகம் இல்லாத எதிர்க்கட்சியாக மாறிவிடும் என்ற அச்சம் பொது மக்களிடையே இருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அரசாங்கத்தின் எளிதில் மாற்றம் கொண்டுவர முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. மாநில அரசு எதிர்க்கட்சியின் ஒற்றுமை பலவீனப்படுத்துவது ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே தலைவர் என்ற கோட்பாட்டினை அவர் கொண்டு வருகிறார். மேலும் அவர் சனாதனம் குறித்தும் பேசினார். மொழிக்கு இரண்டு பக்கம் உண்டு. ஒன்று பேசுதல் மற்றொன்று புரிதல். சனாதன தர்மம் என்றால் தமிழகத்தில் சாதிய ஆதிக்கம் பெண் இழிவு என்பதாகவே இருக்கிறது.

-விளம்பரம்-

இது குறித்து தான் வடநாட்டில் 100 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதுவரை இந்தியாவில் சனாதனம் என்றால் இந்து மதத்தை குறிக்கிறது. இது குறித்து பேசியது ஒரு பொருளில் ஆனால் மக்கள் புரிந்து கொண்டது மற்றொரு பொருளில். இந்த சனாதான பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியி தலையிட விரும்பவில்லை. எம்மதமும் சம்மதம் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.

Advertisement