13 பேரை சுட்டுக்கொன்ற படுகொலை..! பா.ரஞ்சித் போட்ட அன்பு கட்டளை.! என்ன சொன்னார் தெரியுமா

0
441
director ranjith

தமிழ் நாட்டில் 100 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டம் 13 பேரின் உயிர் தியாகத்திற்கு பிறகே அனைவராலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

Pa. Ranjith

தமிழ் நாட்டையே உறையவைத்த இந்த உரிமைக்கான போராட்டத்தில் போலீசார் நடத்திய கொடூர செயலிற்க்கு பல்வேரு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்(தமிழக அரசை தவிர). இந்த போராட்டத்திற்கு தமிழ் சினிமா துறையை சேர்ந்த பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை (மே 26) போலீசார் நடத்திய இந்த வன்முறை ஆட்டத்தை கண்டித்து தமிழ் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடக்கவிருக்கிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் அனைவருக்கும் தனது அழைப்பை விடுத்துள்ளார் பிரபல தமிழ் சினிமா பட இயக்குனர் பா.ரஞ்சித்.

இது குறித்து சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஞ்சித் “வாருங்கள் நண்பர்களே!!!நம் காலத்தின் கொடூர நிகழ்வை ஒன்றிணைந்து எதிர்ப்போம்” என்று தமிழ்நாடு கலை இயக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பாக அழைப்பை விடுத்துள்ளார்.