என் கதையில் சமந்தா வேண்டாம்.! இவர் நடித்தால் நல்லா இருக்கும்.! வெற்றி மங்கை சிந்து.!

0
5793
samantha

இந்திய சினிமா திரை உலகில் சில காலங்களாகவே பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை திரைப்படமாக எடுக்கும் நோக்கில் படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் அரசியல், சினிமா, விளையாட்டு துறை மற்றும் புகழ்பெற்ற அறிஞர்கள், வல்லுநர்கள் ஆகியோர்கள் தனது வாழ்க்கையில் செய்த சாதனைகளையும் பல இன்னல்களையும் குறித்த அவர்களின் வாழ்க்கையை படமாக்கி திரையுலகில் வெளியிடுகின்றனர். இதுகுறித்து தங்கப்பதக்கம் வென்று வாங்கி தந்த இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து வை பற்றி படம் எடுக்க உள்ளதாக திரைப்படத்துறையில் கூறியுள்ளார்கள்.

Image result for p v sindhu

சமீபத்தில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து அவர்கள் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் ஜப்பானை சேர்ந்த வீராங்கனையுடன் போட்டியிட்டு அவரைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். அதனுடன் அவரை பெருமைப்படுத்தும் விதமாக தங்க பதக்கம் வழங்கினார்கள். இந்தியாவிற்கு பேரும் ,புகழும் வாங்கி தந்த அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்பட உலகில் காட்ட திரையுலகம் முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்கள்.

- Advertisement -

இதில் பி.வி. சிந்துவின் கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவை தேர்வு செய்தார்கள் படத் தயாரிப்பாளர்கள். மேலும் இதுகுறித்து சமந்தாவிடம் பேசினார்கள். சமந்தாவும் பிவி சிந்துவின் வாழ்க்கை வரலாறை நடிக்க ஒப்புக்கொண்டார். சமந்தா தன்னுடைய வாழ்க்கைவில் அனுபவித்து கடந்து வந்த பாதைகளை குறித்து நடிக்க உள்ளார் என்று அறிந்தவுடன் பெருமையாகக் கூறுவார் என்று நினைத்தால் ஆனால் அவருடைய செய்தி ரசிகர்களிடையேயும் திரையுலகில் இருக்கும் படக்குழுவினருக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது.

Image result for deepika padukone

இது குறித்து பி.வி. சிந்துவிடம் ஊடகங்கள் கேட்டபோது அவர் கூறியது, என் வாழ்க்கை வரலாற்றில் சமந்தாவிற்கு பதிலாக தீபிகா படுகொன் நடித்தால் சரியாக இருக்கும் என்று கூறினார். ஏன்னா தீபிகா படுகோன் ஒரு சிறந்த பேட்மிட்டன் வீராங்கனை என்றும் கூறினார். ஆனால் நான் நினைத்தால் நடக்குமா??? என்னுடைய வாழ்க்கை வரலாற்று கதையில் யார் நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் தானே முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள் மூலம் படக்குழுவினர் என்ன முடிவு எடுப்பார்கள் என்று தெரியவில்லை. தீபிகா படுகோனா ? சமந்தாவா? என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் வலைத்தளங்களில் பரவி வருகிறது.

-விளம்பரம்-

இதனைத்தொடர்ந்து சாவித்திரி அம்மாவின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார்.இதனால் மக்களிடையே அதிக வரவேற்பையும்,நம்பிக்கையும் பெற்றிந்தார்.மேலும் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் வரலாற்று கதையை தயாரித்து திரையுலகில் வெளிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.இது போல பல பிரபலங்களின் வாழ்கை வரலாறுகளை படங்களாக தயாரித்து திரையுலகில் வெளிட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளார்கள்.

Advertisement