இன்னும் 5 வருஷத்துல ஒரு பயங்கரமான நாட்ல தான் நாமல்லாம் இருக்க போறோம் – ராமர் கோயில் திறப்பு குறித்து பேசிய பா.ரஞ்சித்

0
480
- Advertisement -

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்து இசை வெளியீட்டு விழாவில் பா ரஞ்சித் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. பெரும்பாலும் இவர் ஜாதிகளை மையமாக வைத்து தான் படங்களை கொடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

விழாவில் பா.ரஞ்சித் பேசியது:

இந்த விழாவில் கலந்து கொண்ட பா ரஞ்சித், இன்றைக்கு முக்கியமான நாள். வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்ற வில்லை என்றால் கூட எல்லோரும் தீவிரவாதிகள் தான். அந்தளவுக்கு பயங்கரமாக தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் 5, 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான ஒரு இந்தியாவில் இருக்கப் போகிறோம் என்று பயம் இருக்கிறது. பயமான காலகட்டத்தில் நுழைவதற்கு முன்னர் நம்மை சரி செய்வதற்கும் நம் மனதை பண்படுத்துவதற்கு நம் மூலையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும் மதவாதத்தையும் அளிக்கும் கருவியாக இந்தக் சினிமா கலையை பயன்படுத்தி வருகிறோம்.

ராமர் கோவில் குறித்து சொன்னது:

மக்களிடம் எளிதாக சென்றடைய கூடியது இந்த சினிமா தான். நம்பிக்கையுடன் தான் வேலை செய்து வருகிறோம். இந்தியாவை மோசமான காலகட்டத்தில் இருந்து தள்ளிவிடாமல் இருக்க நம்மால் முடிந்ததை முழுக்க முழுக்க செய்வோம் என்று பேசி இருந்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஞ்சித், இன்று இந்தியா முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவை கொண்டாடுகிறார்கள். இதை நான் தவறு என்று சொல்லவில்லை. அதற்கு பின்னிருக்கும் மத அரசியலை தான் கண்டிக்கிறேன். பிரபலங்கள் பலரும் கோயிலுக்கு செல்வது அவரவர்கள் விருப்பம். அதை நான் குறை கூறவில்லை. அதற்கு பின்னால் நடக்கும் மதவாதத்தையும், பிற்போக்கு தன்மையையும் தான் கண்டிக்க வேண்டும். இதை அனைவரும் புரிந்து செயல்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

-விளம்பரம்-

அயோத்தி ராமர் கோயிலின் திறப்பு விழா:

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. இதன் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாகி இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை காண வருகை தந்துள்ளனர்.

விழா குறித்த தகவல்:

மேலும், பொதுமக்கள் மட்டுமல்லாது ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் மோகன் லால், ராம் சரண், தனுஷ், ரஜினி உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த குடமுழுக்கு விழாவிற்கு நேரில் சென்று இருக்கின்றனர். இந்த ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி மோடி அவர்கள் இன்று அனைவர் வீட்டிலேயும் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

Advertisement