இளையராஜாவிற்க்கு Mp பதவி கொடுக்க காரணமே இதான். ராம்நாத் கோவிந்த் என்ன ஆனார் ? – பா ரஞ்சித்தின் நெத்தியடி பேச்சு.

0
577
ilayaraja
- Advertisement -

இந்திய சினிமா உலகில் இசையில் ஜாம்பவானாக திகழ்பவர் இளையராஜா. இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையில் எல்லோரையும் கட்டிபோட்டவர். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அதில் மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா தான் எழுதி இருந்தார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

அம்பேத்கர் மோடி ஒப்பீடு :

தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார். என்று இளையராஜா, மோடி குறித்து புகழ்ந்து பேசி இருந்தார். அண்ணல் அம்பேத்காருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசியது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.மேலும், இந்த ஒப்பீட்டுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பிலிருந்து இளையராஜாவுக்கு கண்டனங்கள் எழுந்தன. பலரும் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

பா ஜ கா வெளியிட்ட அறிக்கை :

இப்படி ஒரு நிலையில் தான் இளையராஜாவிற்கு பா ஜ க, எம் பி பதவியையும் அளித்து இருந்தது. மேலும், பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தவர் இளையராஜா என்று குறிப்பிட்டு இருந்தது. இதனை சுட்டிகாட்டி பலரும் இளையராஜாவின் சாதி பெயரை குறிப்பிட தேவை என்ன என்று கேள்விகளை எழுப்பினர்.

-விளம்பரம்-

பா ரஞ்சித்தின் கேள்வி :

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பா ரஞ்சித், இளையராஜாவிற்கு mp சீட் கொடுத்து இருப்பது ஒரு கண் துடைப்பு தான் பேசி இருக்கிறார். சமூகத்தில் பல கவனத்தை ஈர்த்த ஒரு நபரை ஒரு கட்சி எந்த விதத்தில் பயன்படுத்துகிறது என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பொதுவாக பாஜக இந்த அடையாள அரசியலை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வருகிறது. அதில் முதல் நபராக ராம்நாத் கோவிந்தை எடுத்துக் கொண்டால் தலித் சமூகத்தை சேர்ந்த அவரை குடியரசுத் தலைவராக மாற்றினார்கள்.

ராம்நாத் கோவிந்த் என்ன ஆனார் :

ஆனால், அவருடைய ஐந்தாண்டு பதவி காலத்தில் அவர் என்ன செய்தார் என்பதை யாருக்கும் தெரியாது.இப்படி ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஒரு நபரை முன்னிலைப்படுத்தும் போது நாங்கள் சாதி மத வேதம் பார்க்காமல் நாங்கள் இதை எல்லாம் செய்கிறோம் என்று அவர்களின் தவறை மறைக்கவே இப்படியெல்லாம் செய்கிறார்கள். இந்த அடையாள அரசியலால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

பா ஜ கவும் தமிழ் சினிமா பிரபலங்களும் :

பா ரஞ்சித் சொல்வது போலவே தமிழ் சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் பா ஜ க கட்சியில் இணைந்து இருக்கின்றனர். எஸ் வி சேகர், ராதாரவி, குஷ்பூ, காயத்ரி ரகுராம், நமிதா, கலா மாஸ்டர், மதுவந்தி, என்று பல பிரபலங்கள் அந்த கட்சியில் இணைந்து இருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் பெரிய பொறுப்புகள் இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

Advertisement