சாய்பல்லவியை பாராட்டி பா ரஞ்சித் போட்ட பதவி – என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க

0
175
ranjith
- Advertisement -

சாய் பல்லவியை குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. இவர் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். பின் இவர் மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். மேலும், இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தாலும் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவி தான் மிகவும் பிரபலமானார்.

-விளம்பரம்-
விமான நிலையத்தில் முகத்தை மூடியபடி வந்த சாய் பல்லவி. அப்படி என்ன ஊர் அது  பாருங்க. - Tamil Behind Talkies

அதனை தொடர்ந்து இவர் படங்களில் நடிக்க வந்தார். தமிழில் கஸ்தூரி மான் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தார் சாய் பல்லவி. பின் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான தியா என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சாய் பல்லவி. அதன் பின்னர் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். இறுதியாக இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘என் ஜி கே’ படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ஷ்யாம் சிங்கா ராய் படம்:

சமீபத்தில் நானி நடிப்பில் இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. இது மறுபிறவியை மையமாக கொண்ட படம். இப்படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது. இதனை தொடர்ந்து பல படங்களில் சாய் பல்லவி கமிட்டாகி இருக்கிறார்.

சாய்பல்லவி நடிக்கும் படம்:

அந்த வகையில் தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கு கதாநாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான புகைப்படம் எல்லாம் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

சாய்பல்லவியின் விரத பர்வம் படம்:

இதனிடையே சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து ‘விரத பர்வம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ரிலீசுக்கு முன்பு சாய்பல்லவி அளித்திருந்த பேட்டியில் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தும், சிலபேர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றது.

பா ரஞ்சித் டீவ்ட்:

இப்படத்திற்கு ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் சாய் பல்லவி நடித்த ‘விரத பர்வம்’ படம் குறித்து ட்விட் ஒன்று போட்டிருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பது, சமீபத்தில் நான் பார்த்த சிறந்த தெலுங்கு படம் ‘விரத பர்வம்’. இயக்குநர் வேணு உடுகுலா எந்த சமரசமும் இல்லாமல் இந்த படத்தை உருவாக்கியதற்காக பாராட்டப்பட வேண்டியவர். இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ராணா டகுபதிக்கு சிறப்பு பாராட்டுகள். சாய் பல்லவி சிறப்பாக நடித்துள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement