ஆணவக்கொலைகள் குறித்து இயல்பாகக் காட்சிப்படுத்திய படம். அட ப.ரஞ்சித்தே பாராட்டிடாரே

0
29541
ranjith
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர் நடிகர் போஸ். இந்த சீரியல் மூலம் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் பல படங்களில் நடித்து வந்தார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் தான் நடித்து உள்ளார். தற்போது நடிகர் போஸ் வெங்கட் அவர்கள் முதன் முறையாக சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகிறார். போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் “கன்னி மாடம்”. கன்னி மாடம் படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது போஸ் வாழ்க்கையில் நடந்த மற்றும் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படத்தின் கதை. இது முழுக்க முழுக்க போஸ் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Image result for kanimadam movie

- Advertisement -

பாண்டியர்களின் உள்நாட்டுச் சண்டை, சோழ அரசுகளால் ஏற்பட்ட போர்ச் சூழல் ஆகியவற்றை ஒட்டி சாண்டியல்யனால் எழுதப்பட்ட சரித்திர நாவல் ‘கன்னி மாடம்’. சாண்டில்யனின் கன்னி மாடம் என்ற சரித்திர நாவலில் இருந்து தான் இந்த படத்தின் தலைப்பு வைத்துள்ளது. ஸ்ரீராம் மற்றும் காயத்ரி படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். ரூபி பிலிம்ஸ் சார்பாக இப்படத்தை ஹஷிர் தயாரித்து உள்ளார்.

ஹரிஷ் சாய் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஹரிஷ் J இனியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் ‘மூணு காலு வாகனம்’ என்ற பாடலை பாடி அசத்தி உள்ளார். இந்நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித் அவர்கள் கன்னி மாடம் திரைப்படதைப் பார்த்து அப்படத்தின் இயக்குநர் போஸ் வெங்கட்டுக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும், கன்னி மாடம் படத்தைப் பார்த்து திரையுலகப் பிரபலங்கள், நெட்டிசன்கள், ரசிகர்கள் என அனைவரும் பாராட்டி உள்ளனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித் அவர்கள் ‘கன்னி மாடம்’ படத்தைப் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பது, கன்னி மாடம் படம் இயல்பான திரையோட்டத்தில், சமரசமில்லாமல் ஆணவக்கொலைகள் குறித்து, தான் சொல்ல நினைத்த கதையை மிக இயல்பாக காட்சிப்படுத்தி உள்ளார்கள். இயக்குனர் போஸ் வெங்கட்டுக்கும், படக் குழுவினருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.

Advertisement