கே ஜி எ பில் மார்கழி மக்கள் இசையில் பா ரஞ்சித் நடனமாடி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருந்தார்.
பா ரஞ்சித் திரைப்பயணம்:
இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து தற்போது விக்ரம் அவர்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் கதையாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
படம் குறித்த தகவல்:
இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தினுடைய இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து பா ரஞ்சித் அவர்கள் ஆர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன சார்பட்டா பரம்பர படத்தினுடைய இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளிலும் ரஞ்சித் ஈடுபட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பண்பாட்டு நிகழ்வுகள் அடிக்கடி நடத்தி வருகிறார்.
மார்கழி மக்களிசை:
அந்த வகையில் வருடம் வருடம் மார்கழி மாதம் மக்கள் இசை என்ற பெயரில் பாரம்பரிய இசை கலைஞர்கள், நடன கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் . இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியை பா ரஞ்சித் தொடங்கி இருக்கிறார். அதன் பேரில் கர்நாடக மாநிலம் கோலாரில் அமைந்திருக்கும் கே ஜி எஃப் நகராட்சி மைதானத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. பல பாரம்பரிய கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி இருக்கிறார்கள்.
ரஞ்சித் நடனமாடும் வீடியோ:
இந்த விழாவை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அடுத்த கட்டமாக இந்த நிகழ்ச்சி ஓசூரில் நடைபெற இருக்கிறது. அதன் பின் சென்னையில் வரும் 28 முதல் 30 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவின்போது இயக்குனர் பா ரஞ்சித், கே ஜி எஃப் மக்களுடைய அன்பு என்னை வியக்க வைக்கிறது. கலை மக்களை ஒருங்கிணைக்கும் ஆயுதமாக உள்ளது. அம்பேத்கர் வழியில் நாம் அனைவரும் புரட்சியாக அணி திரள வேண்டும் என்று கூறி இருந்தார். அதுமட்டுமில்லாமல் விழாவில் பா ரஞ்சித் நடனமாடியும் இருக்கிறார்.