‘குடி பெருமை பேசி திரியும் சாதி வெறியர்கள்’ நாங்குநேரி சம்பவத்தில் அன்புமணியை சூசகமாக விமர்சித்துள்ள ரஞ்சித்.

0
1605
Ranjith
- Advertisement -

தமிழகத்தை உலகிய நாங்குநேரி பகுதியில் அரங்கேறிய கொடூர சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் போட்டுள்ள பதிவு பா ம க தலைவர் அன்புமணி ராமதாஸின் பேச்சை சூசகமாக விமர்சித்து இருப்பது போலவே இருக்கிறது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் முனியாண்டி அம்பிகாபதி தம்பதியின்னாரின் மகன் 12 ஆம் வகுப்பு மகள் ஒன்பதாம் வகுப்பு அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக இவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை, இதுகுறித்து தலைமை ஆசிரியர் விசாரித்துள்ள போது இதே பள்ளியை சேர்ந்த சக மாணவர்கள் தன்னை தாக்கியதாக அந்த மாணவன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இதனை அறிந்த சகமானவர்கள். என் தங்களைக் குறித்து ஆசிரியர்களும் சொன்னாய் என்று அந்த மாணவரிடம் பள்ளி முடிந்த பின் சென்று மிரட்டி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி 10 மணி அளவில் வீட்டிலிருந்த மாணவரை வீட்டிற்குள் வந்த  மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி உள்ளது. இதனை தடுக்க சென்ற அவர் அவருடைய தங்கைக்கும் கையில் அரிவாள் வெட்டுவீழ்ந்தது.

- Advertisement -

இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர் இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு நாங்குநேரி  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவருக்கும் மற்ற  மாணவர்களுக்கும் ஜாதியை ரீதியிலான சண்டை உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் திமுக ஒன்றிய செயலாளர் உறவினர் மற்றும் சக மாணவர்களின் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேரு அரசியல் பிரபலங்கள் சினிமா பிரபலங்களும் தங்கள் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இயக்குனர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல மற்றொரு பதிவில் நாங்குநேரி சம்பவத்தை விளக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை ரீ-ட்வீட் செய்து இருக்கிறார் அந்த பதிவில் ‘சாதி ஒரு அழகிய சொல் ! குடி பெருமை பேசி திரியும் சாதி வெறியர்கள் பார்வைக்கு… ஜெய் பீம் என்று பதிவிட்டபட்டிருக்கிறது. இந்த பதிவு ரஞ்சித் ரீ-ட்வீட் செய்து இருக்கும் நிலையில் இதன் மூலம் அன்புமணி ராமதாஸை சூசகமாக விமர்சித்து இருப்பது போலவே இருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அன்புமணி ராமதாஸ் பேசி இருந்தார்.

அதில் ‘பொதுசிவில் சட்டத்துக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது? தேவையே இல்லை. ஏனெனில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மதம் இருக்கிறது. ஒரு ஜாதி இருக்கிறது. மொழி இருக்கிறது. இனம் இருக்கிறது. இப்போது ஜாதி என்றாலே ஏதோ கெட்ட வார்த்தையை போல பலர் நினைக்கின்றனர். அய்யய்யோ.. ஜாதியா.. என்பது போல பார்க்கிறார்கள்.ஜாதியில் என்ன கெட்டவார்த்தை இருக்கிறது. ஜாதி என்பது ஒரு அழகிய சொல்’ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement