அன்று சாணியை ஊற்றி அடித்து விரட்டப்பட்டவர்கள் இன்று திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுக்கிறார்கள் – ரஞ்சித்தின் சர்ச்சை பேச்சு.

0
262
- Advertisement -

தலித்- பௌத்தம் குறித்து பிகே ரோஸி திரைப்பட விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் கூறி இருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பிகே திரைப்பட விழா குறித்த செய்திகள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தங்களுடைய நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பிகே ரோஸி திரைப்பட விழாவை வருடம் வருடம் நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது நான்காம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழா கடந்த எட்டாம் தேதி தொடங்கி நேற்று முன் தினம் தான் நிறைவடைந்து இருக்கிறது. இந்த விழாவில் நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலந்து இருந்தார்கள். அந்த வகையில் விழாவில் பா ரஞ்சித், தங்கலான் படத்தைப் எடுக்கும் போது நிறைய நூல்களைப் படித்திருக்கிறேன். அப்போது ஒரு நூலில் பார்ப்பர்கள், பறையர்கள் குறித்த நாவல் இருந்தது.

- Advertisement -

விழாவில் பா.ரஞ்சித் குறித்து சொன்னது:

பறையர்கள் இடத்திற்கு பார்ப்பர்கள் வந்தால் நிறைய பிரச்சனையும் போராட்டம் நடக்கும். ஆனால், இப்போது பறையர்களுடைய கல்யாண சடங்குகளில் பார்ப்பர்களை உட்கார வைத்து அவர்கள் கையால் தாலி எடுத்து கொடுக்கும் அளவிற்கு காலம் மாறி இருக்கிறது. நவீன கால இந்தியா எதை உடைத்து? எதை ஒன்று சேர்த்து இருக்கிறது? ஏன் காலனி வெளியில் இருந்திருக்கிறார்கள்? பிடிவாதமாக வன்முறை வேண்டாம் என்று இருந்திருக்கிறார்கள்.

பௌத்தம் குறித்து சொன்னது:

இந்தியாவில் கிட்டத்தட்ட 30 சதவீதம் தலித் மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு சண்டை போட தெரியாதா? அசோகர் வன்முறை வேண்டாம் என்று சொன்னதற்கும் தலித்திற்கும் என்ன உறவு? புத்தர் வன்முறை வேண்டாம் என்பதற்கும் தலித் சண்டை போடாததற்க்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. புத்தர் சண்டையை பார்த்துவிட்டு தான் துறவறம் சென்றார். தலித் ஏன் பௌத்தம் மதத்தை பின்பற்றினார்கள். விடாப்பிடியாக பௌத்தத்தை தலித் ஏன் விடவில்லை.

-விளம்பரம்-

சாதி படங்கள் குறித்து சொன்னது:

மேலும், இந்திய சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் புராண படங்களை தான் எடுத்திருந்தார்கள். அதற்குப்பின் சுதந்திரம் பேசும் படங்களை கொடுத்தார்கள். அதனை அடுத்து தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வந்தது. திராவிட கட்சிகளைப் பற்றியும் அவர்களுடைய கொள்கைகளை பற்றியும் பேசும் படங்கள் வெளிவந்திருந்தது. எம்ஜிஆர் கால கட்டம் வந்தது. அப்போது கமர்சியல் நோக்கி சினிமா சென்றது. தேவர்மகன், சின்ன கவுண்டர், பெரிய வீட்டு பண்ணைக்காரன் போன்ற பல படங்கள் வந்தது. இது முற்றிலுமாக வேறொரு விஷயத்தை கொண்டு சென்றது.

தமிழ் சினிமா குறித்த ஆவேசம்:

இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் உடைய நோக்கத்தை மாற்றியது. அதற்குப் பிறகு நிறைய ஜாதியின் பெருமை குறித்த படங்கள் வந்தது. இதெல்லாம் விவாதமாக ஆனதா? என்று கேட்டால் இல்லை. ஏன் அப்போது விவாதத்திற்கு உண்டாக்கவில்லை? இப்போது ஒரு படம் எடுக்குறாங்க என்றாலே ரொம்ப நல்ல கதையாக இருந்தாலும் ஏன் ஜாதியை வைத்து எடுக்கிறீர்கள்? உங்களால் தான் சாதி பிரச்சனை வருகிறது. ஜாதி எண்ணத்தை உங்கள் படங்கள் தான் உருவாக்குகிறது என்றெல்லாம் ஒரு சிலர் கூறுகிறார்கள். ஆனால், இதற்கு முன்னாடி வந்த ஜாதி படங்களை பார்த்து ஏன் இந்த கேள்விகளை கேட்கவில்லை? ஜாதி பெருமைகளைப் பற்றி பேசிய படங்கள் நிறைய வந்தும் எந்த விவாதங்களும் ஏற்படுத்தவில்லை, விமர்சனங்களும் எழவில்லை. என்னைப் பொறுத்தவரை அந்த சினிமாக்கள் எதிரான சினிமாக்களை கிடையாது. அது இயல்பான சினிமா என்று ஆதங்கத்துடன் பேசி இருந்தார்.

Advertisement