உங்களுக்கு இது நடந்தா, அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்லுங்க – கலாநிதி மாறனின் கலக்கலான பேச்சு. அதிர்த்த ஜெயிலர் அரங்கம்.

0
1665
Jailer
- Advertisement -

அடுத்த சூப்பர் ஸ்டார் யாருன்னு நீங்களே சொல்லுவீங்க என்று ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ஞ்சில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கூறியிருக்கும் கருத்து தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 கால கட்டத்தில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்து தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் நடித்து வருகின்றனர். பின் இந்த படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் கடந்த மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

அதனை அடுத்து இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் அடுத்த கூறுகிறார்கள். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆடியோ வெளியீட்டு விழா:

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஜெயிலர் பட குழுவினர் பலர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் செம மாஸ் ஆக பேசி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி சோசியல் மீடியாவில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இவரை அடுத்து விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கூறியது, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் இன்னும் ஜெயிலர் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த அத்தனை பேரும் படம் சூப்பர் என்று சொல்லி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ரஜினி குறித்து சொன்னது:

இந்த படத்தோட கதையை முதலில் கேட்டது ரஜினி சார் தான். கதை எப்படி சார் இருக்குது என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் கதை அருமையாக இருக்கு, நெல்சன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொன்னார். இதே பதிலை தான் இவர் எந்திரன் படத்தின் போதும் என்னிடம் சொன்னார். எனக்கு முன்னாடியே என் தாத்தா கலைஞர் ரஜினி சாரை ரசித்தார். இப்போ நான் ரசிக்கிறேன். எனக்குப் பிறகு என்னுடைய அடுத்த தலை முறையான என் மகள் அவரை ரசிப்பார்.

அடுத்த சூப்பர் ஸ்டார்:

பாடல் ஆசிரியர் சூப்பர் சுப்பு சொன்ன மாதிரி அப்பண்ணலாம் இல்ல. ஐந்து தலைமுறையினர் அவருக்கு ரசிகராக இருக்கிறார்கள். ‘ரஜினி சார் is a record maker Not a breaker’. ரஜினி சாருக்கு போட்டி ரஜினி சாரே தான். வேறு யாரும் இல்லை. ரஜினி சாருக்கு இப்போ 72 வயதாகிறது. இன்னும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதே மாதிரி உங்களுக்கும் நின்றால் நீங்களும் சொல்லுங்க நான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அதுவரைக்கும் இந்திய திரை உலகிலேயே ரஜினி சார் மட்டும்தான் சூப்பர் ஸ்டார். இதுதான் உண்மை என்று கூறியிருக்கிறார்.

Advertisement