திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பா. ரஞ்சித் செய்து செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பிகே திரைப்பட விழா குறித்த செய்திகள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தங்களுடைய நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பிகே ரோஸி திரைப்பட விழாவை வருடம் வருடம் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நான்காம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழா கடந்த எட்டாம் தேதி தொடங்கி நேற்று முன் தினம் தான் நிறைவடைந்து இருக்கிறது. இந்த விழாவில் நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலந்து இருந்தார்கள். இதில் தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல மொழி திரைப்படங்கள் மற்றும் ஆவண படங்கள் திரையிடப்பட்டது.

Advertisement

பிகே ரோஸி திரைப்பட விழா:

அதோடு பல்வேறு தலித் இயக்குனர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலித் சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். கேரளா திரைப்படத் துறையில் தலித் இயக்கம் பரவுவதில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள். அந்த வகையில் மலையாள இயக்குனர் பிஜு தாமோதரன் அவர்கள் பல விஷயங்களை பகிர்ந்தார். அப்போது அவர் மேடையில் காலா படத்தில் ரஜினிகாந்த் போன்ற ஒரு ஸ்டார் நடித்ததை பெரிய விஷயம்.

மேடையில் ரஞ்சித் செய்தது:

அது ரஞ்சித்தின் அரசியல் என்று ரஜினிகாந்துக்கு தெரியுமா? என்பது சந்தேகம் தான் என்று சொன்னவுடன் ரஞ்சித் மேடையிலேயே நக்கலாக சிரித்திருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் அங்கிருந்த எல்லோருமே சிரித்து இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலருமே, நன்றியை மறக்கக்கூடாது. ரஜினியை வைத்து படம் பண்ணிய நான் தான் நீ இந்த இடத்தில் இருக்கிறாய்.

Advertisement

நெட்டிசன்கள் கண்டனம்:

ரஜினியை வைத்து படம் எடுப்பதற்கு முன்பு இருந்த ரஞ்சித்துக்கும், இப்போது இருக்கும் ரஞ்சித்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்றெல்லாம் மோசமாக இயக்குனர் ரஞ்சித்தை திட்டி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

Advertisement

ரஜினி-ரஞ்சித் கூட்டணி:

அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதில் கபாலி படம் 2016-ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கிஷோர் குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் 3500 திரையரங்குகளில் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது.

Advertisement