தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா ரஞ்சித். பொதுவாகவே தமிழ் சினிமாவில் காலம் காலமாக ஜாதிக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட படங்கள் வெளிவந்தாலும் நிஜத்திற்கு நெருக்கமான அரசியல் சினிமா படத்தை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் சினிமா விவாதங்களை உருவாக்குபவர் இயக்குனர் பா ரஞ்சித். 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இப்படி இவர் இயக்கிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
பா.ரஞ்சித்தின் திரைப்பயணம்:
மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார். இவர் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. தற்போது வெளிவந்த ரைட்டர் படமும் இவருடைய தயாரிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வந்தார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து உள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவர உள்ள படம்:
அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் மனோஜ் லயனல் ஜோன்சன், ஷியாம் சுந்தர் இயக்கத்தில் வெளியாகி இருந்த குதிரைவால் படத்தை ரஞ்சித் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவிற்கு ஒரு முழுக்க முழுக்க ஒரு புதுமையான படைப்பு என்றாலும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் பா ரஞ்சித் பற்றி பலரும் தெரியாத விஷயத்தை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.
பா. ரஞ்சித் பற்றிய வீடியோ:
அதுஎன்னவென்றால், பா ரஞ்சித் வீடு, கிராமம், உறவினர்கள் பற்றிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே இருக்கும் கரலப்பாக்கம் என்னும் கிராமம் தான் பிரபல இயக்குனர் ரஞ்சித்தின் சொந்த ஊர். பழமையாக இருந்த இந்த வீடு தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரஞ்சித் அவர்கள் மனைவி, பிள்ளைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். அவரது தாயார் மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகிறார். தந்தை பாண்டுரங்கன் சமீபத்தில் தான் மரணம் அடைந்தார்.
பா.ரஞ்சித் குறித்து உறவினர்கள் கூறியது:
ரஞ்சித்தின் தம்பி, அண்ணன் வீடுகள் எல்லாம் அருகே உள்ளது. பின் உறவினர்களிடம் ரஞ்சித் பற்றி கேட்ட போது, ரஞ்சித் சிறுவயதிலிருந்தே பொறுமைசாலி ,ஓவியம் வரைவார், ரொம்ப அமைதியான பையன். சின்ன வயதில் எப்படி இருந்தாரோ அப்படி தான் இருக்கிறார். ஊரில் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் ரஞ்சித் வந்துவிடுவார். வந்தாலும் எல்லோரிடமும் அன்பாக,சினிமா பிரபலம் என்ற பந்தா எதையுமே காண்பித்துக் கொள்ள மாட்டார். அதேபோல் யாருக்காவது படிப்பிற்காக உதவி செய்ய வேண்டுமென்றால் உடனடியாக செய்வார். ரொம்ப எளிமையாக இருப்பார் என்று அவருடைய உறவினர்கள் எல்லோரும் புகழ்ந்து பேசி இருந்தார்கள். தற்போது பா ரஞ்சித் பற்றிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.