‘ஜெய் பீம்’ பேர கொடுக்க இத சொல்லிட்டு தான் கொடுத்தேன் – சூர்யாவிற்கு தலைப்பை கொடுத்த காரணம் குறித்து ரஞ்சித் விளக்கம்.

0
743
ranjith
- Advertisement -

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்த படம் ஜெய்பீம். பழங்குடியின மக்களுக்காக போராடிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். பழங்குடியின மக்களின் வாழ்க்கையும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியையும் மையமாகக் கொண்ட படமாக ஜெய்பீம் அமைந்திருக்கிறது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் மக்களின் மத்தியில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தும் இந்த படம் ஒரு சில சமூகத்தினர் மத்தியில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

-விளம்பரம்-
ranjith

இது ஒரு பக்கமிருக்க ஜெய் பீம் படத்தின் தலைப்பை இயக்குனர் பா ரஞ்சித் இடம் இருந்து தான் வாங்கியதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. ஜெய் பீம் என்ற தலைப்பை இயக்குனர் பா ரஞ்சித் தான் பதிவு செய்து வைத்திருந்தார். மேலும், சூர்யா மற்றும் படக்குழுவினர் ரஞ்சித்திடம் ஜெய்பீம் தலைப்பை கேட்டு இருக்கிறார்கள். அதற்கு ரஞ்சித் அவர்கள் ஜெய் பீம் என்ற வார்த்தை பொதுவானது, எல்லோருக்கும் சொந்தம் என்று சொல்லி அவர் அனுமதி கொடுத்து இருக்கிறார். இதுகுறித்து சூர்யா பேட்டியில் பேசி அவருக்கு பெரிய மனசு, நன்றி என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஜெய் பீம் பெயர் குறித்தும், சூர்யாவின் படத்திற்கு கொடுத்ததற்கான காரணத்தையும் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ஜெய்பீம் என்ற வார்த்தை பொதுவான வார்த்தை. அது அம்பேத்காரின் முழக்கம், அவருடைய கருத்து, கொள்கை ஆகும். தமிழகத்தில் ஜெய்பீம் என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதோடு சிலர் அம்பேத்கருடன் ஒப்பிட்டு கொச்சையாக பேசி வருகிறார்கள். குறிப்பாக ஜெய்பீம் என்ற வார்த்தை வடமாநில வார்த்தை என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் பல ஜாதி பிரிவுகள் இருக்கிறது.

அரசியல் ரீதியாக பார்த்தால் அம்பேத்காரை தவிர இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட முடியாது என்று நினைத்தேன். தெரிந்தும் தெரியாமலும் எல்லோருக்கும் அம்பேத்கருடன் தொடர்பு இருக்கிறது. எல்லா சாதியினரும் அம்பேத்கரை ஏற்றுக்கொண்டார்கள். பின் தமிழகத்தில் ஜெய்பீம் என்ற முழக்கம் எல்லா மக்களையும் ஒன்றிணைக்கும் சொல்லாக இருக்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். அதனால் தான் நான் ஜெய் பீம் என்ற வார்த்தையை எல்லா மேடைகளிலும் சொன்னேன். ஆனால், ஒரு சிலர் இதை சாதி அடையாளமாக பார்க்க ஆரம்பித்தார்கள். அதில் எனக்கு விருப்பமில்லை. இது பொதுவான சொல். அப்போ தான் எனக்கு சூர்யா சார் இடம் இருந்து போன் வந்தது.

-விளம்பரம்-

அவர்கள் சூர்யா சார் நடித்திருக்கும் படத்தைப் பற்றி சொன்னார்கள். அதற்கு உங்களுடைய ஜெய் பீம் என்ற தலைப்பு வேண்டும் என்று சொன்னார்கள். நானும் சரி வைத்துக்கொள்ளுங்கள் ரொம்ப நல்ல விஷயம். இந்த வார்த்தை பொது சமூகத்திற்கு சேர வேண்டும். மக்களை ஒன்றிணைக்கும் விஷயத்திற்கு பயன்படுகிறது என்றால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பின் அந்தப் பெயருக்கு பிரச்சனை இல்லாத படமாக இருக்க வேண்டும் இது ஒரு சமூகத்திற்கான வார்த்தையாக இல்லாமல் எல்லோருக்கும் பொதுவானதாக மாற வேண்டும் என்று சொன்னேன்.

மேலும், ஒரு பின்தங்கிய சமூகத்திற்கு போராட துணையாக நிற்கும் வார்த்தையாக ஜெய்பீம் இருப்பது நினைத்து எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏன்னா, அம்பேத்கர் ஒரு சில இனத்திற்கு என்று யோசிக்காமல் எல்லாருக்காகவும் போராடியவர். அந்த ஜெய்பீம் வார்த்தை எனக்கு மட்டும் சொந்தம் இல்லை. நமக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் சொந்தமானது. படத்திற்கு பிறகு ஜெய் பீம் வார்த்தை பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. எல்லா இடத்திலும் அந்த வார்த்தை சேர்ந்திருக்கிறது. அது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

Advertisement