என்ஜாய் என்சாமி சர்ச்சைக்கு பிறகு ரஞ்சித்- சந்தோஷ் நாராயணன் சந்தித்துக் கொண்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக மாரி செல்வராஜ் திகழ்கிறார். இவர் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல், பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி இருந்தார்.
இந்த படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘வாழை’. இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர், உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசை அமைத்து இருக்கிறார். ஏற்கனவே மாரி இயக்கத்தில் கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழை படம் விழா:
மேலும் இந்த படத்தினுடைய முதல் பாடலான தென்கிழக்கு இன்று மாலை வெளியாகியிருந்தது. இந்நிலையில் வாழை படத்தினுடைய விழாவில் படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் சந்தோஷ் நாராயணன்- ரஞ்சித் இருவருமே கலந்து கொண்டிருந்தார்கள். என்ஜாய் என்சாமி சர்ச்சைக்கு பிறகு ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் இருவரும் ஒரே மேடையில் சந்தித்து அருகில் உட்கார்ந்து இருந்தார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரே மேடையில் ரஞ்சித்-சந்தோஷ் நாராயணன்:
இதை பார்த்த பலருமே இருவரும் சேர்ந்து விட்டார்களா? இனி இவர்கள் கூட்டணியில் பாடல் வெளியாகுமா? என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள். பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி முதல் சார்பட்டா பரம்பரை படம் வரை இணைந்து பணியாற்றியவர் சந்தோஷ் நாராயணன். ஆனால், கடைசியாக பா. ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் சந்தோஷ் நாராயணன் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பா. ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் இருவரும் நெருங்கிய நண்பர்களாக தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டிருந்தார்கள்.
என்ஜாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை:
பின் இருவரும் இலேசான மனஸ்தாபம் காரணமாக பிரிந்து இருந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து இனி பணியாற்றிய வாய்ப்பில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அப்படி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட காரணம் சந்தோஷ் நாராயணனின் மகள் பாடகி தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் தான். இவருடன் இந்த பாடலை ராப் பாடகர் அறிவு என்பவரும் இணைந்து பாடி இருந்தார். இந்த பாடல் 2021 ஆம் ஆண்டு யூடியூபில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ரஞ்சித்-சந்தோஷ் நாராயணன் பிரிவு:
பின் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழாவில் எஞ்சாயி எஞ்சாமி பாடலை பாடகி தீ மட்டும் பாடி இருந்தார். ஆனால் , இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்த அறிவு இந்த விழாவில் வரவில்லை. இந்த விவகாரம் குறித்து பாடகர் அறிவு, நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது. முடிவில் எப்பொழுதும் உண்மையே வெல்லும்” என பதிவிட்டு இருந்தார். இந்த விவாகரத்திற்கு பின்னர் சந்தோஷ் நாராயணன் – அறிவு கூட்டணி பிரிந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் அறிவுக்கு ஆதரவாக பா ரஞ்சித் இருந்ததால் சந்தோஷ் நாராயணன்- ரஞ்சித் உடைய கூட்டணியும் பிரிந்தது.