ரஜினிக்கு என் அரசியல் பிடிக்கும், இப்படம் வெளியாகி பல விவாதங்களை உருவாக்கும் – தங்கலான் இசையில் வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் பேச்சு

0
473
- Advertisement -

‘தங்கலான்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது. சமீபகாலமாக ‘தங்கலான்’ படம் குறித்து செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் ‘தங்கலான்’ . கேஜிஎஃப் இல் இருந்த பூர்வ குடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

பயத்தைப் போக்கியது வெங்கட் பிரபு தான்

நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை. நான் நினைக்கும் கருத்துக்களை எடுத்து விடலாம் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் அப்படி சொல்ல முடியுமா என்ற பயம் வந்தது. அந்த பயத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தான், ‘சென்னை 28’ என்ற படத்தில் மூலம் போக்கினார்.

ரஜினிக்கு என் அரசியல் பிடிக்கும்:

ஒரு சொல்லப்படாத கதையை கொண்டாட்டத்தின் மூலம் மக்களிடம் சேர்க்கலாம் என்று அவரிடம் தான் நான் கற்றுக் கொண்டேன். அதனால் தான் ஏற்கனவே எழுதிய படங்களை விட்டுவிட்டு ‘அட்டகத்தி’ என்ற கதையை எழுதினேன்‌. அடுத்த படம் மக்களுக்காக இருக்க வேண்டும் என்று ‘மெட்ராஸ்’ எடுத்தேன். அதைப் பார்த்து தான் ரஜினிகாந்த் எனக்கு ‘கபாலி’ வாய்ப்பு கொடுத்தார். அவருக்கு என் அரசியல் ரொம்ப பிடிக்கும். அதேபோல், சார்பட்டா படத்துக்கு பிறகு நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று விக்ரம் சொன்னார்.

-விளம்பரம்-

விக்ரம் குறித்து:

சினிமாவுக்காக தன்னை வருத்திக் கொள்கிற, கலையை நேசிக்கிற ஒரு கலைஞனுடன் சேர்ந்து பணிபுரிவது சுலபமான விஷயம் இல்லை. இந்தப் படம் ஒரு சவாலாக இருக்கும் என்று நினைத்தபோது, முதல் நாள் படப்பிடிப்பிலேயே நான் எதிர்பார்த்த தங்கலானாக வந்து அனைத்தையும் விக்ரம் சுலபமாகிவிட்டார். அதேபோல், நடிகர் பசுபதி போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் போட்டி மனப்பான்மையுடன் நடித்திருக்கிறார். பின் பார்வதிக்காகவே ஒரு கதை எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

தங்கலான் விவாதங்களை உருவாக்கும்:

இந்தக் கதையை சொன்னவுடன் அவர் உடனே ஒப்புக்கொண்டார். ஏன் படப்பிடிப்பில் சரியாக பேசுவதில்லை என்று பார்வதி கேட்டுக் கொண்டே இருந்தார். பொதுவாக என் படங்களின் படப்பிடிப்பு மிகவும் ஜாலியாக இருக்கும். ஆனால், இந்த படத்திற்காக கருணையற்ற மனிதனாக மாறி அனைவரையும் ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இந்த சினிமா உங்களுடைய உணவுகளை கண்டிப்பாக தொடும் என்று நம்புகிறேன். அதன் மூலம் இந்த சினிமா பல விவாதங்களை உருவாக்கும் என்று தங்கலான் குறித்து கூறியுள்ளார்

Advertisement