தங்கலான் படத்தின் நன்றி விழாவில் பா.ரஞ்சித் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்து இருக்கிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் தங்கலான்.
இந்த படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார்.
தங்கலான் படம் :
மேலும், இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருமே தங்கலான் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தங்கலான் படத்தின் வெற்றியை அடுத்து ‘நன்றி தெரிவிக்கும் விழா’ இன்று நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அனைவருக்குமே ஒரு புத்தர் சிலையை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அன்பாக வழங்கி இருக்கிறார். அதற்குப் பின் விழாவில் இயக்குனர் பா. ரஞ்சித், தமிழ் சமூகத்திலேயே தங்கலான் ஒரு முக்கியமான வெற்றியை ஏற்படுத்தி இருக்கிறது.
விழாவில் பா.ரஞ்சித் சொன்னது:
புதிய அனுபவத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும், எனக்கு இருக்கும் ஒரு அகத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற வேட்கை தான் இந்த படம். இந்த படத்துக்கு பாசிட்டிவான விஷயங்களை நிறைய பேர் எழுதுவதை பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும் உழைப்பு ரொம்பவே முக்கியம். நான் இன்னைக்கு இங்கு நிற்பதற்கு முக்கிய காரணம் உழைப்பால் தான். என்னையும் தாண்டி இந்த படத்திற்காக நிறைய பேர் பயங்கரமாக உழைத்திருக்கிறார்கள்.
படம் குறித்து சொன்னது:
அது காசுக்காக மட்டும் இல்லை, என் மேலே அவர்கள் வைத்திருக்கும் அன்பும் ஒரு காரணம். சில நேரங்களில் நம்ம மேல வன்மம் வர தான் செய்யும். அதில் கவனம் செலுத்தினால் அங்கேயே நின்று விடும். அதற்கும் மேலே நீங்கள் அன்பு கொடுக்கும்போது அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். தங்கலான் படத்தை பற்றி பல இடங்களில் பேசுகிறார்கள். இந்த படத்தோட வெற்றி மிகப் பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அழகிய பெரியவன் அண்ணனோட வசனங்கள் தான் இந்த படத்தை இன்னும் உயிர்ப்பாக மாற்றி இருக்கிறது. அனிதா ஒட ஓவியங்கள், அவர்கள் வண்ணங்களை பயன்படுத்துகிற விதம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.
தயாரிப்பாளர் குறித்து சொன்னது:
கிராபிக்ஸில் சில குறைகள் இருந்தது. ஆனால், படத்தை முடித்து கொடுக்கணும்னு இரவும் பகலாக கிராபிக்ஸ் டீம் வேலை பார்த்திருந்தார்கள். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார் எனக்கு உறுதுணையாக இருந்தார். தங்கலான் படத்தில் ஓவர் பட்ஜெட் பிரச்சனை வந்தது. என் காதுபடவே நிறைய பேர் படம் ரிலீஸ் ஆகாது என்றெல்லாம் பேசி இருந்தார்கள். ஆனால், அதையும் தாண்டி ரிலீஸ் பண்ணி இருக்கிறார். இன்று எனக்கு போன் பண்ணி, நான் பெரிய ஹீரோவை கூட்டிட்டு வருகிறேன். கமர்சியல் படம் பண்ணலாம் என்று சொல்கிறார். முக்கியமாக விக்ரம் சார், ரசிகர்கள் மேலையும் கலை மேலையும் அவர் அவ்வளவு காதல் செய்கிறார். அதுதான் இந்த உழைப்புக்கு காரணம் என்று கூறியிருந்தார்